செய்யூர் வட்ட மீனவர்களுக்கு கோட்டைக்காடில் மானிய டீசல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

செய்யூர் வட்ட மீனவர்களுக்கு கோட்டைக்காடில் மானிய டீசல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுப்பட்டினம்:கடலுார் - ஆலம்பரைகுப்பம் பகுதி மீனவர்கள், கோட்டைக்காடு மீன் வள பங்க்கில் டீசல் பெற, ஏற்பாடு செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட, கடலோர பகுதியில், 44 மீனவ பகுதிகள் அமைந்து, பாரம்பரிய மீன் பிடி மீனவர்கள் வசிக்கின்றனர். வாழ்வாதாரத்திற்காக, 7,500க்கும் மேற்பட்டோர், கடலில் மீன் பிடிக்கின்றனர்.தமிழக மீன்வளத்துறையில், மீன்பிடி விசைப்படகு உரிமையாளராக பதிவுபெற்ற மீனவர்களுக்கு, அரசு, மானிய விலையில் டீசல் வழங்குகிறது.
சென்னை அடுத்த, நீலாங்கரையில் மட்டுமே, மீன்வள பங்க் அமைந்து, மாவட்ட தென்பகுதியினர், டீசல் பெற, 85 கி.மீ., பயணித்து அவதிப்படுகின்றனர்.இதுகுறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்ட நிலையில், மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி பகுதியில், மற்றொரு பங்க் அமைக்க, மீன்வளத்துறை முடிவெடுத்தது.இதற்காக, 30 சென்ட் இடம் வழங்க, வருவாய்த்துறையிடம் கோரியுள்ளது.
இந்நிலையில், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட, கடலுார் - ஆலம்பரைகுப்பம் இடைப்பட்ட பகுதி மீனவர்களுக்கு, கடப்பாக்கம், கோட்டைக்காடு பகுதி பங்க்கில், டீசல் வழங்க, மாவட்ட நிர்வாகத்திடம் பரிந்துரைக்கப்பட்டது.ஆட்சியர், பா.பொன்னையா அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது, அங்கு டீசல் பெற, ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, மீன்வளத்துறையினர் கூறும் போது, மாவட்டத்தில், வெட்டுவாங்கேணி, கடம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், பங்க் அமைக்க உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X