சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விதிகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு பயிற்சி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருத்தணி:சாலை விதிமுறைகள் குறித்து, மோட்டார் வாகன ஆய்வாளர், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஒரு நாள் பயிற்சி நேற்று அளித்தார்.
திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நேற்றுமுன்தினம் நடந்தது.இதில், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர், பன்னீர்செல்வம் கூறியதாவது:
இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக, 'ஹெல்மெட்' அணிந்து, சாலை விதிகளை மதிக்க வேண்டும்; கார் ஓட்டுனர்கள், 'சீட் பெல்ட்' அணியாமல் ஓட்டக் கூடாது.சாலையில் வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. விபத்துகளை தவிர்க்க, வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை மதிக்க வேண்டும். அனைத்து வாகன ஓட்டிகளும், கையில் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்துக் கொண்டு தான் வாகனங்களை இயக்க வேண்டும்.
ஓட்டுனர் உரிமம் பெறுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார்.இவ்வாறு அவர் கூறினார்.பயிற்சியில், திருத்தணி, பள்ளிப்பட்டு தாலுகாவில் இருந்து, 250க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை