நெற்பயிரில் நோய் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெற்பயிரில் நோய் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு தினமலர் செய்தி எதிரொலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியத்தில் நெற் பயிரில் நோய் தாக்குதல் குறித்து தினமலர் செய்தி எதிரொலியாக வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஒன்றியத்தில் அய்யனார்குளம், மம்பட்டிபட்டி, நரியம்பட்டியில் நெல் வயல்களில் இலைச்சுருட்டு புழுக்களின் தாக்குதல் உள்ளது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக வேளாண் அலுவலர் மணிமேகலை, உதவி அலுவலர்கள் கண்ணன், ஜெகதீசன், சந்திரகுமார் வயல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.நெற் பயிர்களில் இலைச்சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், ஸ்கிப்பர்புழு தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது: இலைச்சுருட்டு புழு தாக்கிய பயிர்களின் இலைகளில் பச்சையம் சுரண்டப்பட்டு வெளுத்து விடும். தண்டு துளைப்பான் தாக்குதலால், தழைப்பருவத்தில் குருத்து காய்தல்,வளர்ச்சியடைந்த பயிரில் வெண் கதிர் அறிகுறி தென்படும். நாற்று நடும்போது நாற்றுக்களின் நுனியை கிள்ளி நடுவதால் நோய் வராமல் தடுக்கலாம்.ஸ்கிப்பர் புழுக்களின் தாக்குதலால் இலைகள் பின்னோக்கி சுருண்டு விடும், என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை