அரசு மருத்துவமனையில் டாக்டர்-, எஸ்.ஐ., மோதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனையில் டாக்டர்-, எஸ்.ஐ., மோதல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருமங்கலம், திருமங்கலத்தில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்களுக்கு சான்று பெறுவது தொடர்பாக எஸ்.ஐ., இளங்கோவிற்கும், டாக்டர் வசந்தலட்சுமிக்கும் அரசு மருத்துவமனையில் மோதல் ஏற்பட்டது.நேற்று முன் தினம் இரவு எஸ்.ஐ., இளங்கோ போதையில் வாகனங்களை ஓட்டியதாக பிடிபட்ட ஐந்து பேருடன் சான்று பெற மருத்துவமனை சென்றார். டாக்டர் வசந்தலட்சுமி 4 பேருக்கு சான்று வழங்கி விட்டு ஒருவருக்கு வழங்கவில்லை. எஸ்.ஐ., ''அவர் குடித்தாரா? பரிசோதனை முடிவை தாருங்கள்,'' என்றார். மறுத்த டாக்டர்,இவரது ரத்தத்தை மதுரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பின் சான்று வழங்க முடியும்,'' என்றார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. எஸ்.ஐ., தலைமை டாக்டர் பூமிநாதனிடம் புகார் செய்தார். அவர் உத்தரவின்படி சம்பந்தப்பட்ட நபர் குடிக்கவில்லை என டாக்டர் சான்று வழங்கினார்.டாக்டர் பூமிநாதன், நான்கு பேர் மது அருந்தியிருந்ததால் சான்று வழங்கப்பட்டது. ஒருவர் மதுஅருந்தவில்லை. மதுபாட்டில் மட்டும் வைத்திருந்தார். எனவே அவருக்கு சான்று வழங்கப்படவில்லை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை