தொடர் பலி எதிரொலி அதிகாரிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர் பலி எதிரொலி அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் ரயில்வே சுரங்கப்பாதை, வெயில் உகந்த அம்மன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பஸ் ஸ்டாப் பகுதிகளை ஆர்.டி.ஓ., அரவிந்தன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.பஸ் ஸ்டாப்புகளில் இறங்கிரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லும் போது பயணிகள் ரயிலில் அடிபட்டு பலியாகின்றனர். இதை தடுக்க தியாகராஜர் பொறியியல் கல்லுாரி பஸ் ஸ்டாப்புகள் சுரங்கப்பாதை அருகே மாற்றப்பட்டன. சுரங்கப்பாதையில் தண்ணீர் கசிவு, மின் விளக்குகள் இல்லாததால் தண்டவாளங்களை கடக்கும் நிலை உள்ளது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது.அதன் எதிரொலியாக நேற்று ஆர்.டி.ஓ., அரவிந்தன், ஆர்.ஐ., தங்கப்பாண்டியன் வி.ஏ.ஓ., ராஜா, போக்குவரத்து துணை மேலாளர்கள் அறிவானந்தம், ராஜவேல், மாநகராட்சி பொறியாளர்கள் முனிர் அகமது, முருகன் ஆய்வு செய்தனர்.மாநகராட்சி பொறியாளர்கள் கூறுகையில், சுரங்கப்பாதையில் நெடுஞ்சாலைத்துறையினர்மனு கொடுத்து கட்டணம் செலுத்தினால் மின் விளக்கு அமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை