போலீஸ் செய்திகள்... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்...

Added : ஜூன் 15, 2018
Advertisement

கார் வேன் மோதல்: 6 பேர் காயம்உசிலம்பட்டி: தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரும், ஆரியபட்டியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு உசிலம்பட்டி வந்த ஆட்டோவும் சில்லாம்பட்டி விலக்கில் நேற்று மதியம் மோதின. இதில் கார் டிரைவர் சரவணன், ஆட்டோவில் பயணித்த உச்சப்பட்டி முருகேசன், ஆரியபட்டி அசோக்குமார், உசிலம்பட்டி ராமநாதன், ராஜக்காள்பட்டி மீனாட்சி, ஜெயசித்ரா, ஆகியோர் காயமுற்றனர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.----பள்ளியில் மடிக்கணினி திருட்டுஅலங்காநல்லுார்: குட்டிமேய்க்கிபட்டியில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு அலுவலக பூட்டை உடைத்து 2 மடிக்கணினிகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அலங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.வாலிபர் மர்ம மரணம்சோழவந்தான்: பொம்மன்பட்டி பாக்கியம் மகன் சின்னதம்பி, 27. மன நலம் பாதிக்கப்பட்ட இவர் நேற்று முன் தினம் இரவு வெளியே சென்றவர், திரும்பவில்லை. கரட்டுப்பட்டி பெரியாறு பிரதான கால்வாய் பாலம் கீழ் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் கொலையானரா அல்லது பாலத்தில் இருந்து விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.மின்சாரம் தாக்கி வாலிபர் பலிதிருமங்கலம்: கள்ளிக்குடி அருகே பெரியஆலங்குளம் கட்டட காண்ட்ராக்டர் குருநாதன். இவரது மகன் மருதுபதி,18. இவர் பத்தாம் வகுப்பு முடித்து தந்தைக்கு உதவியாக வேலைக்கு சென்று வந்தார். நேற்று காலை இருவரும் புதுக்குளத்தில் கட்டட வேலையில் ஈடுபட்டனர். அப்போது மின்மோட்டாரை பழுது பார்க்க முயன்ற மருதுபதி மின்சாரம் தாக்கி இறந்தார். கூடக்கோயில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கார் மோதி தொழிலாளி பலிமேலுார்: ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சி அம்மாபட்டி பாண்டி, 35. கருங்காலக்குடியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு குன்னாரம்பட்டி விலக்கில் நடந்து சென்ற போது மதுரையில் இருந்து திருச்சி சென்ற கார் மோதி பாண்டி பலியானார். கொட்டாம்பட்டி போலீசார் விசாரித்து சிதம்பரத்தை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியனை, 41, கைது செய்தனர்.போலீஸ் உட்பட 15 பேர் மீது வழக்குமேலுார்: பூஞ்சுத்தி ராஜா மகன் காளிதாஸ், 28. கோயம்புத்துார் ஆயுதப்படையில் போலீசாக வேலை செய்கிறார். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்பையாவிற்கும் பாதை பிரச்னை இருந்தது. நேற்று முன்தினம் இரவு இப்பிரச்னையில் இரு தரப்பினருக்கும் அடிதடி ஏற்பட்டது. கருப்பையா புகாரின்படி காளிதாஸ், அவரது தாய் சிவனாயி உள்ளிட்ட 6 பேர் மீதும், சிவனாயி புகாரின்படி கருப்பையா உள்ளிட்ட 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருப்பையா மகன் ஆணை அம்பலத்தை,24, போலீசார் கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை