கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டிகள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னைமாநிலம் 1967ல் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து 50 ஆண்டுகளானதையொட்டி கல்லுாரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் மதுரை செந்தமிழ் கல்லுாரியில் ஜூன் 25 காலை 9:00 மணிக்கு நடக்கின்றன.மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாநில போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். வெற்றி பெறுவோருக்கு சென்னையில் நடக்கும் 'தமிழ்நாடு 50' பொன் விழாவில் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்க பதக்கம், இரண்டாம் பரிசு 25 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்க பதக்கம், மூன்றாம் பரிசு 10 ஆயிரம் ரூபாய், நான்கு கிராம் தங்க பதக்கம் வழங்கப்படும். மாணவர்கள், கல்லுாரி முதல்வரிடம் பரிந்துரை கடிதம் பெற்று போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனரிடம் வழங்கி பங்கேற்கலாம் என கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார். விபரங்களுக்கு 0452-----253 0711.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X