'இ சேவை' மைய சர்வர் பழுது மாணவர்கள் தவிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ சேவை' மைய சர்வர் பழுது மாணவர்கள் தவிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேரையூர், மதுரை மாவட்டத்தில் அரசு பொது இ சேவை மையங்களில் சர்வர் பழுதால் சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.இம்மாவட்டத்தில் 10 தாலுகா அலுவலகங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் இம்மையங்கள் செயல்படுகின்றன. அரசு கேபிள் டிவி மூலம் செயல்படும் இம்மையங்கள் மூலம் மாணவர்கள், பொது மக்களுக்கு தேவையான 25 வகையான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தற்போது பள்ளி, கல்லுாரிகளில் சேர்க்கை நேரமாக இருப்பதால் மாணவர்களுக்கு இருப்பிடம், வருமானம், ஜாதி போன்ற சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன.ஆனால் 10 நாட்களாக இ சேவை மையங்களில் சர்வர் செயல்படவில்லை. இதனால் தேவையான சான்றிதழ்களை பெற முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். வருவாய் அலுவலகங்களில் மனு செய்தால் இ சேவை மையங்களை அணுகும்படி அதிகாரிகள் தெரிவிப்பதாகவும் மாணவர்கள் புலம்புகின்றனர். இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை