பெண் மூளையிலிருந்த  ரத்தக்கட்டி அகற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெண் மூளையிலிருந்த  ரத்தக்கட்டி அகற்றம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் திருப்பூர் பெண் மூளையிலிருந்த ரத்தக்கட்டியை அகற்றி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முருகேசன் மனைவி வாஞ்சிநாயகி,35. இவருக்கு சில மாதங்களுக்கு முன் இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. ஸ்கேன் செய்ததில், மூளை ரத்தக்குழாயில் கட்டி இருப்பது தெரிந்தது. ரத்த குழாய் கட்டி அழுத்தத்தால் கண் நரம்பு பாதித்து, பார்வை கோளாறு ஏற்பட்டது. திருப்பூர், திருவனந்தபுரத்தில் சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. இதையடுத்து, அவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் ஷியாம் தலைமையில் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் மூளையில் இருந்த ரத்த கட்டியை அகற்றினர். இக்குழுவினரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைவர் முத்துராமலிங்கம் பாராட்டினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை