பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை| Dinamalar

பத்திரிகை ஆசிரியர் சுட்டுக் கொலை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்;ஸ்ரீநகரில், பிரபல பத்திரிகை ஆசிரியர், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையிலான, பி.டி.பி., - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் வெளிவரும், 'ரைசிங் காஷ்மீர்' பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி, 54.இவர், ஸ்ரீநகரில் உள்ள அலுவலகத்திலிருந்து நேற்று மாலை, வெளியே வந்த போது, அங்கு வந்த பயங்கரவாதிகள், துப்பாக்கியால் சுட்டனர். இதில், குண்டு காயம் அடைந்த புகாரி, சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இருவர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. அவர்கள் இருவரும், உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ஏற்கனவே, 2000ம் ஆண்டில், புகாரி மீது, மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அவருக்கு போலீசார் பாதுகாப்பு அளித்து வந்தனர். இந்நிலையில் அவரை, பயங்கரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை