வெடிகுண்டு வெடித்து காயமுற்றவர் இறப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு வெடித்து காயமுற்றவர் இறப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரையில் நாட்டு வெடிகுண்டு வெடித்து காயமுற்ற நரசிம்மன் அரசு மருத்துவமனையில் இறந்தார்.வாழைத்தோப்பு முனியசாமி,29. இவர் மே 9 ல் உறவினர் சித்ரா வீடு அருகே உள்ள அறையில் நண்பர் சிவகாசி நரசிம்மனுடன் தங்கியிருந்தார். இவர்களது அறையில் வெடிகுண்டு வெடித்தது. இதில், வீட்டின் மேற்கூரை சேதமுற்றது. இதில் காயமுற்ற இருவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன், வெடிகுண்டு தடுப்பு இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆய்வு செய்தனர்.வாழைத்தோப்பு வேல்குமார்,26, சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் 'பொட்டு' சுரேஷ் கொலையில் தொடர்புடைய சபாரத்தினம் உட்பட சிலர் மீது கீரைத்துறை போலீசார் வழக்கு பதிந்தனர். இந்நிலையில் வேல்குமாரை கொலை செய்தவர்களை பழி வாங்க சகோதரர் முனியசாமி, நரசிம்மனுடன் சேர்ந்து நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடித்திருக்கலாம், என போலீசார் சந்தேகித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நரசிம்மன் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X