மருத்துவம் சார்ந்த புதிய பட்டப் படிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மருத்துவம் சார்ந்த புதிய பட்டப் படிப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:''அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், மருத்துவம் சார்ந்த, நான்கு ஆண்டு கால பட்டப் படிப்புகள் துவங்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சட்டசபையில், நேற்று அமைச்சர், விஜயபாஸ்கர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:தமிழக மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகமான, 'டாம்கால்' சார்பில், கூடுதலாக, ஒரு தொழில் அலகு துவங்கப்படும்.
சுகாதார பூங்காக்கள்
மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவோருக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதற்கான, சிறப்பு ஆம்புலன்ஸ்கள், முக்கிய நகரங்களில் இயக்கப்படும்.மாரடைப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு, உடனடி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, விழுப்புரம், தர்மபுரி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, தேனி, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், 'கேத் லேப்' கருவிகள், 21 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
துாத்துக்குடி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, காரப்பேட்டை, அரசு புற்றுநோய் ஆராய்ச்சி மையம், சென்னை, அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை ஆகியவற்றிற்கு, 50 கோடி ரூபாய் செலவில், புற்றுநோய் சிகிச்சைக்காக, 'லீனியர் ஆக்ஸிலேட்டர்' கருவிகள் வழங்கப்படும்.
கோவை, மதுரை, சேலம், திருவள்ளூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, வேலுார், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு, நடமாடும், 'எக்ஸ்ரே' கருவிகள், மூன்று கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.
கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை கட்டுப்படுத்த, 12.93 கோடி ரூபாய் செலவில், கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.சுற்றுப்புற துாய்மை குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 35 ஆரம்ப சுகாதார நிலையங்களில், 2.62 கோடி ரூபாய் செலவில், சுகாதார பூங்காக்கள் அமைக்கப்படும்.
இலவச பயிற்சி மையம்
அனைத்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கும், 18.84 கோடி ரூபாய் செலவில், 'தலசீமியா, ஹுமோபிலியா' போன்ற அரிய வகை மரபு நோய்களுக்கும் மருந்துகள் வழங்கப்படும்.பிரசவத்திற்கு பின், கருத்தடை வளையம் பொருத்திக் கொள்ளும் தாய்மார்களுக்கு, 300 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், தர்மபுரி, செங்கல்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், காது வால் நரம்பு உள்வைப்பு கருவி பொருத்தும் மையங்கள், 4.37 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில், நான்காண்டு கால, மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகள் துவங்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை மருத்துவமனைகளிலும், 'ஹோம் ஹெல்த் கேர் கோர்ஸ்' என்ற, ஓராண்டு பட்டய படிப்பு துவங்கப்படும்.மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, உணவில் உள்ள கலப்படங்களை கண்டறிவதற்காக, 16 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி அளிக்கப்படும்.
பெண் கருக்கொலையை தடுப்பதற்காக, மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு, 16 லட்சம் ரூபாய் செலவில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படும். மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு, போட்டி தேர்விற்கான இலவச பயிற்சி மையங்கள் துவங்கப்படும்.
தடை
திருவள்ளூர், திருப்பூர் உள்ளிட்ட, 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில், 1.5 கோடி ரூபாய் செலவில், தாய் பால் வங்கிகள் துவங்கப்படும். 23 அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகள், 40 அரசு மருத்துவமனைகள், மலைப் பகுதிகளில் உள்ள, மூன்று மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, 17.5 கோடி ரூபாய் செலவில், 200 அதிநவீன, 'டயாலிசிஸ்' கருவிகள் வழங்கப்படும்.
சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் மதுரை, ராஜாஜி அரசு மருத்துவமனைகளில், திருநங்கையருக்கான சிகிச்சைப் பிரிவு, 30 லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.திருப்பூர், கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், புதுக்கோட்டை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ஆகியவற்றிற்கு, 30 கோடி ரூபாய் செலவில், 'எம்.ஆர்.ஐ., ஸ்கேன்' வசதி ஏற்படுத்தப்படும்.
மெல்லும் புகையிலை பொருட்களை, அரசு, ஏற்கனவே தடை செய்துள்ள நிலையில், 'எலக்ட்ரானிக் சிகரெட்'களும் தடை செய்யப்படும்.இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giridharan S - Kancheepuram,இந்தியா
15-ஜூன்-201807:53:42 IST Report Abuse
Giridharan S கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதுகலை படிப்பு பெண்கள் மருத்துவ மாணவர்களுக்கு விடுதி எப்போது திறக்கப்படும் என்பதை இந்த அறிவிப்பில் சொல்லப்படவில்லை. இந்த கல்லூரியில் இந்த மேற்படிப்பை பயிலும் பல மாணவர்கள் போதிய இடம் இன்றி வெளிய தங்கி வந்து பயிலுகின்றனர். அமைச்சர் இதில் கவனம் செலுத்தி அணைத்து மாணவிகளுக்கும் போதிய இடம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளுவாரா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை