திருத்தணியில் ரூ.110 கோடி குடிநீர் திட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருத்தணியில் ரூ.110 கோடி குடிநீர் திட்டம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''திருத்தணி நகராட்சியில், 110 கோடி ரூபாய் மதிப்பில், புதிய குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,'' என, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி தெரிவித்தார்.
சட்டசபையில், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - நரசிம்மன்: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். நகருக்கு, 70 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க, குடிநீர் வாரியம் ஆய்வு மேற்கொண்டது. திருப்பாற்கடல் பகுதியிலிருந்து, குடிநீர் எடுத்து வர, 110 கோடி ரூபாய்க்கு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதற்கு, நிதி ஒதுக்க வேண்டும்.
அமைச்சர், வேலுமணி: திருத்தணிக்கு குடிநீர் வழங்க, குடிநீர் வடிகால் வாரியம், 110 கோடி ரூபாய்க்கு, கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கான மதிப்பீடு தயார் செய்து, வழங்கி உள்ளது. இதற்கு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, நிதியாதாரம் இறுதி செய்யப்பட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X