பெரியாறு அணை 17ல் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணை 17ல் திறப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்:தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு, முதல் போக நெல் சாகுபடிக்காக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து, 17 ல் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீரை நம்பி, கம்பம் பள்ளத்தாக்கில், 14 ஆயிரத்து, 707 ஏக்கர் பரப்பளவில், இரு போக நெல் சாகுபடி உள்ளது. ஆண்டுதோறும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும்.இந்த ஆண்டு, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, அணையின் நீர்மட்டம், 126.70 அடி உயர்ந்ததைத் தொடர்ந்து, 17 ல் தண்ணீர் திறந்து விட அரசு உத்தரவிட்டுள்ளது.முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இன்று துணைக்குழுவினர் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
ஆய்வு
தென்மேற்கு பருவமழையால், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் நேற்று காலை, 126.7 அடியாக இருந்தது. மொத்த உயரம், 152 அடி. அணைக்கு நீர்வரத்து, 2,908 கன அடியாகவும், தமிழகப் பகுதிக்கு நீர்திறப்பு, 1,400 கன அடியாகவும் உள்ளது.நீர்மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்தும், ஜூன் 21 ல் மூவர் குழு ஆய்வு செய்ய வருவதாலும், இன்று மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் ராஜேஷ் தலைமையிலான துணைக்குழு அணையில் ஆய்வு செய்கின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை