தலைகீழாக பயணித்த விமானம்| Dinamalar

தலைகீழாக பயணித்த விமானம்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தலைகீழாக பயணித்த விமானம்

கேன்பரா : ஆஸ்திரேலியாவின் 'குவாண்டா' நிறுவன விமானம், இரு நாட்களுக்கு முன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சிலிருந்து மெல்போன் நகருக்கு புறப்பட்டது. பசிபிக் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்தபோது, காற்றின் சுழற்சியால் அதன் மீது மோதுவது போல மற்றொரு விமானம் வந்தது கடைசி நேரத்தில் அறியப்பட்டது.

இரண்டும் மோதுவதை தடுக்க, ஆயிரம் அடி உயரத்துக்கு கீழே குவாண்டா விமானத்தை இறக்க விமானிகள் துரிதமாக முடிவெடுத்தனர். அதன்படி 20 நொடிகள் வரை விமானத்தை தலைகீழாக இயக்கிய அவர்கள், பாதுகாப்பான இடத்தை அடைந்தனர். என்ன நடக்கிறதென அறியாமல் பயணிகள் குழப்பமடைந்தனர்.

பின்னர், பயணிகளுக்கு நடந்தவை குறித்து விளக்கப்பட்டதாக குவாண்டோ விமான நிறுவனம் நேற்று அறிவித்துள்ளது. நடுவானில் ரோலர்கோஸ்டரில் சென்றது போல இருந்ததாகவும், நிலைமையை விமானிகள் சிறப்பாக கையாண்டதாகவும் பயணிகள் கூறினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mukundan - chennai,இந்தியா
15-ஜூன்-201818:04:25 IST Report Abuse
mukundan அதை தலைகுப்புற என்று தானே சொல்லவேண்டும், தலகீழ் என்றால் வேறு மாதிரி அறியப்படும் அல்லவே.
Rate this:
Share this comment
Cancel
15-ஜூன்-201816:02:15 IST Report Abuse
a.thirumalai என்னா தலைவரே நானும் தலைகீழாகதான் பறந்தது என்று நினைத்து விட்டேனே. இது பொது அறிவுல வருமா.
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஜூன்-201812:24:53 IST Report Abuse
Kuppuswamykesavan எப்படியோ, சூப்பரா சமாளித்து பயணிகளை காப்பாற்றிவிட்டார்கள், விமான ஊழியர்கள், பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201808:26:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //Qantas flight's '10-second free-fall nosedive' blamed on wake turbulence// சரியான தமிழ் வார்த்தை பிரயோகம் முக்கியம். தலைகீழாக ( not upside down) பறக்கவில்லை.. 10 வினாடி செங்குத்தாக கீழே, அல்லது "தடாலென்று கீழே" விமானிகளின் கட்டுப்பாடு இன்றி விழுந்தது. Air pockets என்று சொல்லும் தாழ்ந்த காற்றழுத்த பகுதிகளில் கூட விமானங்கள் தடாலென்று ஓரிரு வினாடிகள் கட்டுப்பாடின்றி கீழே "விழும்".. ஒரு நூறடி.. இம்முறை முன்னால் சென்ற விமானம் ஏற்படுத்திய சுழல் காரணமாக பத்து வினாடிகள் விழுந்துள்ளது. (காற்றின் தடை இல்லை எனில் 450 மீட்டர் )
Rate this:
Share this comment
senthil - chennai,இந்தியா
15-ஜூன்-201817:57:42 IST Report Abuse
senthilசூப்பரப்பு...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூன்-201808:06:04 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தலைகீழாக இல்லை ஆசிரியரே.. செங்குத்தாக கீழ் நோக்கி என்பது தான் சரி.. அதுவும் கிட்டத்தட்ட செங்குத்தாக தான் பயணிகள் விமானத்தை இயக்கமுடியும். ஜெட் போர் விமானத்தை தான் தலைகீழாக, சுழற்றி எல்லாம் பறக்க விடமுடியும்.
Rate this:
Share this comment
Cancel
Raman - kottambatti,இந்தியா
15-ஜூன்-201805:53:55 IST Report Abuse
Raman அதெப்படி விமானம் தலைகீழாக போகும்? அது "wake turbulance" .. வேறு ஒரு குவான்டஸ் விமானம் சென்றதால் ஏற்பட்டது.. அதனால் குவான்டஸ் விமானம் இரண்டாயிரம் அடி "nosedive " செய்யவேண்டியதாயிற்று.. ஆனால் விமான ஊழியர்கள் அதை திறமையாக கையாண்டார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை