தகுதி நீக்கம் வழக்கு தீர்ப்பு தலைவர்கள் கருத்து என்ன?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தகுதி நீக்கம் வழக்கு தீர்ப்பு தலைவர்கள் கருத்து என்ன?

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு குறித்து, தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்: ஜனநாயக மாண்பை காப்பதில், நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான, நியாயமான தீர்ப்பு, விரைவாக கிடைக்க வேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது, மறுக்கப்படும் நீதி என்பதுடன், பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகி விடும். அதை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்.
அ.தி.மு.க., செய்தித் தொடர்பாளர், வைகைச்செல்வன்: 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பு, தினகரன் அணிக்கு, யானையின் காதுக்குள் புகுந்த கட்டெறும்பை போல அதிருப்தியை தந்துள்ளது.
தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை: இந்த தீர்ப்பு, தீர்வில்லாமல் வந்திருக்கிறது. தீர்வை தரும் தீர்ப்பை தான் எதிர்பார்த்தோம். இந்த தீர்ப்பில், யாருக்கும் சாதகமும் இல்லை; பாதகமும் இல்லை. வழக்கின் தீர்ப்பு அணுகுண்டாக வெடிக்குமா அல்லது புஸ்வாணமாக ஆகி விடுமா என, எதிர்பார்த்துஇருந்த நிலையில், இத்தீர்ப்பு, ஊசி வெடியாக வெடித்துள்ளது. மூன்றாவது நீதிபதி, என்ன தீர்ப்பு சொல்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என, நீதித்துறை சொல்லிஇருக்கிறது.
அ.ம.மு.க., துணைச் பொதுச்செயலர், தினகரன்: 18 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் வழக்கின் தீர்ப்பால், எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை. புதுச்சேரி சபாநாயகர் எடுத்த நடவடிக்கைக்கு, ஒரு தீர்ப்பு; தமிழக சபாநாயகருக்கு, ஒரு தீர்ப்பு என, எப்படி மாறுபட்டு வரும்?இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ragh - Kanchi,இந்தியா
15-ஜூன்-201814:43:32 IST Report Abuse
M Ragh Pondicherry is Union territories. So judgement is different
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X