சட்டசபையில் பலா பழம் கேட்டார் துரைமுருகன்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் பலா பழம் கேட்டார் துரைமுருகன்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும், பலாப்பழம் வழங்கும்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கோரிக்கை விடுத்ததால், சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - சபா.ராஜேந்திரன்: நெய்வேலி தொகுதி, கீழக்குப்பம் ஊராட்சியில், முந்திரி மற்றும் பலா தொழிற்பேட்டை அமைக்கும் செயற்குறிப்பு, அரசிடம் உள்ளதா?
அமைச்சர் பெஞ்சமின்: அரசின் பரிசீலனையில் எதுவும் இல்லை.
சபா.ராஜேந்திரன்: நெய்வேலி பகுதியில், முந்திரி, பலா, அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. பலாப் பழத்திலிருந்து, 'சிப்ஸ்' உட்பட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு பலாப் பழம், 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்தால், 500 ரூபாய் வரை கிடைக்கும்.
எனவே, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை, பெண்களுக்கு கற்றுத் தர வேண்டும். இப்பொருட்களை தயார் செய்ய, தொழிற்பேட்டை அமைத்து தர வேண்டும்.அமைச்சர் பெஞ்சமின்: ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்கே, போதுமான அளவு, முந்திரி, பலா உற்பத்தி இல்லை. அந்த நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து, முந்திரி இறக்குமதி செய்கின்றன.
சபா.ராஜேந்திரன்: பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. சிறிய விவசாயிகள் பயன் பெற, தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
அமைச்சர் பெஞ்சமின்: அப்பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பலாப் பழம், சுவை மிகுந்தது. உறுப்பினர் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன்: முந்திரி, பலா குறித்து பேசுகிறீர்கள். துணை சபாநாயகர் ஜெயராமன், உறுப்பினர்களுக்கு, 'நீரா' பானம் கொடுத்தார். அதேபோல், நீங்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு, தலா, ஒரு பலாப் பழம் கொடுங்கள்.
அமைச்சர் பெஞ்சமின்: நீங்கள் சாப்பிடுவதாக இருந்தால், வழங்கத் தயார்..இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
15-ஜூன்-201810:58:49 IST Report Abuse
ஆரூர் ரங் பலாப்பழம் ? முழுசாவே முழுங்கச்சொன்னாலும் முழுங்கிடுவாரு. ஊழல் மலைமுழுங்கி
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:24:42 IST Report Abuse
Bhaskaran இவரே ஒரு ஞானப்பழம் (அறிவாலும் அனுபவத்தாலும் )பெயரில் வேறு முருகன் இவருக்கு பழம் எதற்கு
Rate this:
Share this comment
Cancel
Amirthalingam Sinniah - toronto,கனடா
15-ஜூன்-201806:46:50 IST Report Abuse
Amirthalingam Sinniah சட்டசபையில் இருந்து பேசுகிறீர்களா? அல்லது சந்தையில் நின்று பேசுகிறீர்களா? விளங்கவேயில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X