'திருவிழா புஸ்வாணம் தினகரன்' அமைச்சர் விஜயபாஸ்கர் கிண்டல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'திருவிழா புஸ்வாணம் தினகரன்' அமைச்சர் விஜயபாஸ்கர் கிண்டல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''கட்சியை தாங்கி பிடிப்பதாக கூறிக் கொண்டு அலைபவர், திருவிழாவில் வெடிக்கப்படும் புஸ்வாணம்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கிண்டலடித்தார்.சட்டசபையில், அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:
திருவிழா காலங்களில், கோவில்களில் மத்தாப்பு, புஸ்வாணங்கள் கொளுத்தப்படும். அவை, தரையில் இருந்து மேல் நோக்கி செல்வதை பார்ப்பதற்கு, பரவசமாக இருக்கும். வானில், வண்ணங்களாக வெடித்து, சிதறுவதை பார்ப்பதற்கு, ரம்மியமாக இருக்கும். ஆனால், அவை கீழே வரும்போது, அருகில் போய் பார்த்தால், கருகி கரித்துகள்கள் மட்டுமே இருக்கும்.
கட்சியை தாங்கி பிடிப்பதாக கூறிக்கொண்டு அலைபவர், அதை போன்றவர்.வீட்டு மாடங்களில், பெண்கள் வைக்கும் அகல் விளக்குகள், நின்று நிதானமாக எரிந்து, வெளிச்சம் கொடுக்கும். மழை, புயல், சூறாவளி என, எத்தனை இடர்பாடுகள் வந்தாலும், ஏற்றி வைத்த அகல் விளக்கு அணையாது. காற்றில், விளக்கின் சுடர், லேசாக அசைந்தால், அதை அணையாமல் காப்பதற்கு, இரண்டு கரங்கள் இருந்தால் போதும்.
அதில், முதல் கரம், முதல்வர் பழனிசாமி உடையது. இரண்டாவது கரம், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு சொந்தமானது. இவர்கள் இருவரும் இணைந்து, அ.தி.மு.க.,வை நீடித்த, நிலையான அணையா விளக்காக உருவாக்கி காட்டுவர். ஜெயலலிதாவின் ஆன்மா, எங்களை வழிநடத்தும்.இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை