தலைமையாசிரியர் பணியிடம் மாறுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தலைமையாசிரியர் பணியிடம் மாறுதல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை, மதுரையில் அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வில் 10 பேருக்கு உத்தரவு வழங்கப்பட்டது.இளங்கோ மாநகராட்சி பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலையில் நடந்த கலந்தாய்வில் 20 பேர் பங்கேற்றனர். இதில் மாவட்டத்திற்குள் 9 பேரும், தேனி மாவட்டத்திற்கு ஒருவரும் மாறுதல் பெற்றனர். 10 பேர் 'மாறுதல் தேவையில்லை,' என எழுதிக்கொடுத்தனர்.மாலை பி.ஜி., ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு நடந்தது. இதில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர் தேவை அடிப்படையில் எட்டு ஆசிரியர்களுக்கு பணிநிரவலுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டன.குற்றச்சாட்டு: உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் அந்தஸ்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் அதிராமசுப்பு, நாகனாகுளம் பள்ளி தலைமையாசிரியராக மாறுதல் பெற்றார். ஆனால் தலைமையாசிரியர் காலிப் பணியிடம் பட்டியலில் 'நேர்முக உதவியாளர்' பணியிடம் காண்பிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை