பஸ் ஊழியர்களுக்கு நிலுவை வழங்கல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பஸ் ஊழியர்களுக்கு நிலுவை வழங்கல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:அரசு பஸ் ஊழியர்கள் அறிவித்த, 'ஸ்டிரைக்'கை முறியடிக்கும் வகையில், இரண்டு நாட்களில், அவர்களுக்கு, 109.45 கோடி நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, 2016, செப்டம்பரில், 13வது ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2018, ஜனவரியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஊதிய உயர்வு ஒப்பந்தப்படி, அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.
இதனால், வரும், 19ம் தேதி முதல், ஸ்டிரைக் நடத்தப்போவதாக, தொழிற்சங்கங்கள், 'நோட்டீஸ்' கொடுத்திருந்தன.இந்நிலையில், ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை உடனே வழங்க, போக்குவரத்து துறைக்கு, 109.45 கோடி ரூபாயை, தமிழக அரசு கடனாக அளித்தது. உடனடியாக, நிலுவைத்தொகையை வழங்கவும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், பஸ் ஊழியர்களுக்கு இரண்டு நாட்களாக, நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.மேலும், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்திய, தொழிலாளர் நலத் துறை அதிகாரிகள், 'அரசிடம் தெரிவித்து, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருகிறோம்' என, உறுதி அளித்து உள்ளனர். தற்போது, சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால், போராட்டம் ஏதும் நடக்காத வகையில், தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி உள்ளது.
நிலுவைத்தொகை வழங்கப்பட்டுள்ளதால், தொழிற்சங்கங்கள் அறிவித்த, ஸ்டிரைக் வாபஸ் பெறப்படும் என, தெரிகிறது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:49:40 IST Report Abuse
Bhaskaran தொழிலாளர் களுக்கு உண்டான நிலுவைத்தொகையை இனியாவது அவரவர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே வழங்க ஏற்பாடுகளை செய்தால் மிகவும் நல்லது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை