கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி| Dinamalar

கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி

லக்னோ, ''அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், கன்னுாஜ் தொகுதியில் போட்டியிடுவேன்,'' என, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில், சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் கூறியதாவது:அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், கன்னுாஜ் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். என் தந்தை, முலாயம் சிங், மெயின்புரி தொகுதியில் களமிறங்குவார். என் மனைவி, டிம்பிள் யாதவ், லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார். இந்த முறை, பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். பா.ஜ., பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.டிம்பிள் யாதவ், தற்போது, எம்.பி.,யாக உள்ள கன்னுாஜ் தொகுதியில், அகிலேஷ் யாதவ், அடுத்தாண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
15-ஜூன்-201817:52:57 IST Report Abuse
ANANDAKANNAN K பாருங்கள், இளைய தலைமுறை வாக்காளர்களே, ஒரு கட்சியில் அப்பா ஆட்சிசெய்து நாட்டை சாதியால் பிளவு செய்தார்,பிறகு அவர் மகன் ஆட்சிசெய்து மதம் என்ற கொடிய விஷத்தை மக்களிடம் பரப்பினார், பிறகு தன் மருமகளை பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கி ஆடம்பரம் என்ற முள்மரத்தை வளர்த்தார். இதுதான் திரு.முலாயம் சிங்க் யாதவ் அவர்களின் சாதனை. அரசு வகையில் எதாவுது சலுகை கிடைக்குமா அதை நாமும் நம் குடும்பமும் எப்படி அனுபவிப்பது என்று ஆலோசனை செய்பவர்தான் இந்த முலாயம். முன்பு மாயாவதி அவர்களை கடுமையாக விமர்ச்சனம் செய்பவர்கள் தான் இவர்கள் குடும்பம் அதுவும் எதை வைத்து அவரது சாதிய விவாத பொருளாக்கி ஆனால் இன்று திரு.அகிலேஷ் யாதவ் "அத்தை" என்று உறவு கொண்டாடும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டார். பதவி வேண்டும் என்றால் எதிரியை கூட போலி உறவுக்கு அழைப்பு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-ஜூன்-201813:33:45 IST Report Abuse
bal குடும்பமே ஒவ்வொரு தொகுதியில் நின்று நாட்டை நாசம் செய்யும். இதுதான் ஜனநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
15-ஜூன்-201813:32:56 IST Report Abuse
Dr. Suriya சட்டசபையில் மாயாவதி கூட கூட்டணி வைத்தால் முதல்வர் பதவியை அவருக்கு விட்டு கொடுக்க வேண்டி வரும் என்பதால் இப்பவே MP ஆக திட்டம் தீட்டிவிட்டார் அகிலேஷ்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-ஜூன்-201811:24:38 IST Report Abuse
Pasupathi Subbian அரசு வீட்டை காலி செய்யும்பொழுது , அதை முழு நாசம் செய்து ஏறத்தாழ 45 லட்சரூபாய்க்கு சேதாரம் செய்துள்ளார். என்ன ஒரு சின்னப்புத்தி . இந்த லட்சணத்தில் தேர்தலில் வெற்றிபெறவில்லை என்றால் , தொகுதியையே துவம்சம் செய்துவிடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
15-ஜூன்-201811:14:59 IST Report Abuse
Nallavan Nallavan மாநில அரசியலில் இனிமேலாவது தேற முடியும் என்கிற நம்பிக்கை இல்லை போலிருக்கிறது ....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201811:12:55 IST Report Abuse
இந்தியன் kumar அகிலேஷ் மாநில தலைவரா? தேசிய தலைவரா ??
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஜூன்-201810:42:11 IST Report Abuse
A.George Alphonse This man won't win and also loose his deposite in that constituency. This is totally waste and unwanted trial by this man in next Lokh Sabha election. When he is not able to win in Assemply election as MLA and how he expect his victory in Lokh Sabha election as MP.The people of UP hereafter don't elect these corrupted political parties to come to power in their state in any elections in future.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:09:53 IST Report Abuse
Srinivasan Kannaiya உங்கள் குழந்தைகளுக்கு இன்னும் இருபத்தொரு வயசு வரவில்லையா... இல்லை என்றால் அங்கேயே எங்காவது தேர்தலில் நிறுத்தி இருக்கலாம்...
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-ஜூன்-201806:27:41 IST Report Abuse
mindum vasantham கண்ணுஜ் இல் தான் எதிரி மன்னன் முஹம்மத் கஹோரியுடன் சேர்ந்து நமது பிரித்விராஜ் இந்த முதுகில் குத்தினான்
Rate this:
Share this comment
Cancel
Renga Naayagi - Delhi,இந்தியா
15-ஜூன்-201805:05:32 IST Report Abuse
Renga Naayagi லக்னோ அலகாபாத் வாரணாசி கான்பூர் போன்ற இடங்களில் போட்டியிட தைரியம் கிடையாது ...
Rate this:
Share this comment
balaji - ,
15-ஜூன்-201808:13:11 IST Report Abuse
balajirenga nayagi avargale akilesh ah vidunha unga modi ji and amit shah ji tamilnadu Kerala Pondicherry la potti poduvara solunga...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை