கேரளாவில் நிலச்சரிவு நான்கு பேர் பலி| Dinamalar

கேரளாவில் நிலச்சரிவு நான்கு பேர் பலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர்; 10 பேரை காணவில்லை.
கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.கோழிக்கோடு மாவட்டத்தில், நேற்றும் கன மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, கத்திப்பாரா கிராமத்தைச் சேர்ந்த, மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் பலியாகினர். மேலும், 10 பேரை காணவில்லை; அவர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவி களை வழங்க, மாவட்ட கலெக்டர்களுக்கு, முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு உள்ளார். தேசிய பேரிடர் மீட்பு படையினரும் வந்துள்ளனர். கன மழை காரணமாக, மாநிலத்தின் பெரும்பாலான ஏரிகள், அணைகள் நிரம்பி வழிகின்றன.
சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை