காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்| Dinamalar

காஷ்மீரில் ராணுவ வீரரை கடத்திய பயங்கரவாதிகள்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், பூஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர், சோபியான் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்; இவர், விடுமுறையில், புல்வாமா மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அப்போது, அவரை, பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை நிறுத்தி வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இந்த சமயத்தில், பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இருந்த போதிலும், அதற்கு நம் ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு மே மாதம், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற, உமர் பயாஸ் என்ற இளம் ராணுவ அதிகாரி, பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டதும், மறுநாள், துப்பாக்கிக் குண்டுகள் காயத்துடன், அவரது உடல் கண்டெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள பனார் வனப்பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையில், நம் ராணுவத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் உயிரிழந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை