விரிவாக்க பணிகள் நிபுணர் குழு ஒப்புதல்| Dinamalar

விரிவாக்க பணிகள் நிபுணர் குழு ஒப்புதல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்:சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிக்கு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மீனம்பாக்கத்தில், 1,301 ஏக்கர் பரப்பளவில், சென்னை விமான நிலையம் அமைந்துள்ளது. கூடுதல் நிலங்களை கையகப்படுத்தாமல், 2,476 கோடி ரூபாய் செலவில், விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் சமீபத்தில் நடந்தது.
அதன் பின் நடந்த கூட்டத்தில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர்கள் குழு, இந்த விரிவாக்கப் பணிக்கான ஒப்புதலை அளித்தது.தற்போது ஆண்டொன்றுக்கு, ஒன்றரை கோடி பயணியர், சென்னை விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்தால், மூன்று கோடி பயணியர், விமான நிலையத்தை பயன்படுத்த முடியும் என, நிபுணர் குழு தெரிவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X