உணவின்றி தவிக்கும் இந்தியர்கள் உடல்நிலை மோசமாவதாக கேப்டன் தகவல்| Dinamalar

உணவின்றி தவிக்கும் இந்தியர்கள் உடல்நிலை மோசமாவதாக கேப்டன் தகவல்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:ஐக்கிய அரபு எமிரேட் துறைமுகத்தில், கடந்த ஒரு ஆண்டாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இந்திய சரக்கு கப்பல் ஊழியர்கள், 18 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, கப்பலின், 'கேப்டன்' கூறியுஉள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த மகரிஷி வாமதேவா என்ற சரக்கு கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்சின் புஜைரா துறைமுகத்தில், கடந்தாண்டு ஜூன் மாதம் சிறைபிடிக்கப்பட்டது.இந்த சரக்கு கப்பலின் உரிமையாளரான, வருண் குளோபல் என்ற நிறுவனம், புஜைரா துறைமுகத்துக்கு செலுத்த வேண்டிய தொகை, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்ததை தொடர்ந்து, அந்தக் கப்பல் சிறை பிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், கப்பலில் பயணம் செய்த, 18 ஊழியர்களும் அதில் சிக்கினர். அவர்களை விடுவிக்க, துறைமுக அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஒரு ஆண்டாக, அவர்கள், அந்த கப்பலிலேயே சிக்கி உள்ளனர். உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, ஊழியர்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, கப்பல் கேப்டன் குமார் கிருஷ்ணா, தகவல் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு சமீபத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டதை அடுத்து, அவர், புஜைரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பல ஊழியர்கள், கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதாகவும், நிலைமை இப்படியே தொடர்ந்தால், அவர்களது மனநலம் பாதிக்கப்படும் என்றும், கேப்டன் கிருஷ்ணா தெரிவித்தார்.கப்பலில் சிக்கியுள்ள ஊழியர்களுக்கு,பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள இந்திய துாதரகம், கப்பல் போக்குவரத்து துறை இயக்குனரகம், வெளியுறவுத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில், ஊழியர்களின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
தீயில் சிக்கிய இந்திய கப்பல்
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா அருகே, வங்காள விரிகுடா கடல் பகுதியில், எஸ்.எஸ்.எல்., கோல்கட்டா என்ற சரக்கு கப்பலில், நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.பலத்த காற்று வீசியதால், கப்பல் முழுவதும் தீ வேகமாக பரவியது. மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு, கப்பலில் இருந்த, 22 ஊழியர்களையும் பத்திரமாக மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X