ராஜ் தாக்கரே பிறந்த நாள்: பெட்ரோல் விலை குறைப்பு| Dinamalar

ராஜ் தாக்கரே பிறந்த நாள்: பெட்ரோல் விலை குறைப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:மஹாராஷ்டிர மாநிலத்தில், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர், ராஜ் தாக்கரே பிறந்த நாளையொட்டி, 1 லிட்டர் பெட்ரோல், 4 - 9 ரூபாய் வரை, விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது.
மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக, மஹாராஷ்டிர மாநிலத்தில், 1 லிட்டர் பெட்ரோல், 84.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக் கோரி, போராட்டங்களும் நடக்கின்றன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால், பெரிதும் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிர மக்களுக்கு, ஓர் இன்ப அதிர்ச்சியை, மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி அளித்துள்ளது. அந்த கட்சி தலைவர், ராஜ் தாக்கரேவுக்கு, நேற்று, 50வது பிறந்த நாள்.அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக, அவரது கட்சி நிர்வாகிகள், தலைநகர் மும்பையில் உள்ள குறிப்பிட்ட பெட்ரோல், 'பங்க்'குகளில், 1 லிட்டர் பெட்ரோலை, 4 - 9 ரூபாய் வரை, குறைத்து விற்பனை செய்தனர்.
இதையடுத்து, பெட்ரோல், 'பங்க்'குகளில், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. அனைவரும் இரண்டு சக்கர வாகனங்களுடன், நீண்ட வரிசையில் காத்திருந்து, மகிழ்ச்சியுடன் பெட்ரோல் நிரப்பினர்.ஷிவாடி சட்டசபை தொகுதியில் உள்ள பெட்ரோல், 'பங்க்'குகளில், 1 லிட்டர் பெட்ரோல், ஒன்பது ரூபாய் குறைக்கப்பட்டு, 75.26 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.இதற்கான செலவை, ராஜ் தாக்கரேயின், மஹாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி ஏற்றது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை