பணியில் சேர சென்ற ராணுவ வீரர் மாயம்| Dinamalar

பணியில் சேர சென்ற ராணுவ வீரர் மாயம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விசாகப்பட்டினம்:ஆந்திராவில் இருந்து ரயிலில் புறப்பட்டு, பஞ்சாப் மாநிலம் சென்ற ராணுவ வீரரை, ஒரு மாதமாக காணவில்லை என, அவரது மனைவி, போலீசில் புகார் அளித்துள்ளார்.ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தைச் சேர்ந்தவர், கவரா ஸ்ரீனிவாச ராவ், 40. இவர், உத்தரகண்ட் மாநிலம் ரூர்கியில், ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர், பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு, சமீபத்தில் பணிமாற்றம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, விசாகப்பட்டினத்திலிருந்து மே, 8ல், ஜலந்தர் புறப்பட்டார். ஹரியானாவின் பானிபட் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய ஸ்ரீனிவாஸ், அங்கிருந்து யாரோ ஒருவருடைய மொபைல் போன் மூலம், தன் மனைவியுடன் பேசி உள்ளார்.
தன் மொபைல் போன் மற்றும் 'பர்ஸ்' திருடு போய்விட்டதாக தெரிவித்தவர், பணியில் சேர்ந்த பின் அழைப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பின், ஸ்ரீனிவாச ராவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை.இதையடுத்து, ஜலந்தர் ராணுவ முகாமை தொடர்பு கொண்டபோது, அவர் பணியில் சேரவில்லை என்ற தகவல் கிடைத்தது. ஸ்ரீனிவாச ராவை காணவில்லை என அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்தார். ரயில்வே மற்றும் பானிபட் போலீசார், அவரை தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை