முன்பதிவு இல்லா பெட்டிக்கு 'மொபைல்' செயலி அறிமுகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

முன்பதிவு இல்லா பெட்டிக்கு 'மொபைல்' செயலி அறிமுகம்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:ரயிலில், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிப்பதற்கான டிக்கெட் பெற, பிரத்யேகமான மொபைல் செயலியை, ரயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
ரயிலில், முன்பதிவு பெட்டியில் பயணம் செய்வோருக்கு மட்டுமே, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. மற்றபடி, முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணிப்போர், ரயில் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன், ரயில்வே ஸ்டேஷன், 'கவுன்டரில்' வரிசையில் காத்திருந்து, டிக்கெட் பெற்று பயணிப்பது வழக்கம்.
இந்நிலையில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிப்போருக்கென பிரத்யேகமான. 'மொபைல் போன்' செயலியை, ரயில்வே நிர்வாகம் உருவாக்கி உள்ளது. இந்த செயலியின் உதவியுடன், முன்பதிவு இல்லாத பெட்டிக்கான டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். அதை செயலியின் உதவியுடனே, ரத்தும் செய்யலாம்.மேலும், ரயில்வே, 'பிளாட்பாரம்' டிக்கெட் மற்றும் மாதாந்திர, 'சீசன்' டிக்கெட் புதுப்பித்தல் ஆகியவை கூட, இந்த செயலியின் வாயிலாக பெறலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
utsonmobile எனப்படும், அந்த மொபைல் செயலியை, ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் மொபைல் போன்களில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என, ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
15-ஜூன்-201810:36:05 IST Report Abuse
R. Vidya Sagar ரயில் நிர்வாகம் இந்த தவறான செய்தியை அடிக்கடி வெளியிடுகிறது. ஊடகங்களும் சரி பார்க்காமல் அப்படியே இந்த செய்தியை பிரசுரிக்கின்றன. Play Store இல் எங்கு தேடினாலும் இந்த செயலி கிடைப்பதில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X