கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி| Dinamalar

கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லக்னோ:''அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், கன்னுாஜ் தொகுதியில் போட்டியிடுவேன்,'' என, உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி தலைவருமான, அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள கட்சி அலுவலகத்தில், சமாஜ்வாதி தலைவர், அகிலேஷ் யாதவ் கூறியதாவது:அடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், கன்னுாஜ் தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். என் தந்தை, முலாயம் சிங், மெயின்புரி தொகுதியில் களமிறங்குவார். என் மனைவி, டிம்பிள் யாதவ், லோக்சபா தேர்தலில் போட்டியிட மாட்டார். இந்த முறை, பா.ஜ.,வுக்கு மக்கள் ஆதரவு தர மாட்டார்கள். பா.ஜ., பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து, மக்களை ஏமாற்றி வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
டிம்பிள் யாதவ், தற்போது, எம்.பி.,யாக உள்ள கன்னுாஜ் தொகுதியில், அகிலேஷ் யாதவ், அடுத்தாண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை