ரயிலில், 'செல்பி' எடுத்தால் 6 மாதம் சிறை நிச்சயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரயிலில், 'செல்பி' எடுத்தால் 6 மாதம் சிறை நிச்சயம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:ஓடும் ரயிலில் அல்லது தண்டவாளத்தில், 'செல்பி' எடுத்தால், ஆறு மாத சிறைத்தண்டனை வழங்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக, ரயிலின் கூரை மற்றும் தண்டவாளம் ஆகியவற்றில் நின்று, 'செல்பி' எடுக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற சமயங்களில் விபத்து ஏற்பட்டு, பலர், உயிரிழக்கின்றனர். ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினி லோஹானி, இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி, அனைத்து ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
இந்த அறிக்கைகளின் அடிப்படையில், ரயிலில், 'செல்பி' எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, வாரியம் முடிவு செய்தது. இதுகுறித்து, ரயில்வே வாரியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:ஓடும் ரயிலின் உட்பகுதி, பெட்டியின் கதவு, நடைமேடை ஓரம் மற்றும் ரயில் வரும் போது, அதன் முன் நின்று செல்பி எடுப்போருக்கு, ஆறு மாத சிறை தண்டனை அல்லது, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை