பெண்களை இழிவுபடுத்தி பா.ஜ., - எம்.எல்.ஏ., பேச்சு| Dinamalar

பெண்களை இழிவுபடுத்தி பா.ஜ., - எம்.எல்.ஏ., பேச்சு

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

போபால்:''நற்பண்புகள் இல்லாத, ஒழுக்கமற்ற தலைவரை பிள்ளையாக பெறுவதை விட, மலடியாக இருப்பதே மேல்,'' என, ம.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா பேசியது, சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக உள்ளார். இந்நிலையில், குணா தொகுதியைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., பன்னாலால் ஷக்யா, பொதுக் கூட்டத்தில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியை கடுமையாக விமர்சித்து பேசினார். பெண்களை பற்றி அவர் கூறிய கருத்து, பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பேசியதாவது:
தேசப் பற்று குறித்து பேச, விராட் கோஹ்லிக்கு எந்த தகுதியும் கிடையாது. இந்திய அணிக்காக விளையாடி, நம் நாட்டில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் அவர், இத்தாலி நாட்டிற்கு சென்று, அங்கு திருமணம் செய்தார். பணம் சம்பாதிப்பது இங்கே; அதை செலவு செய்வது வெளிநாட்டில்; இது தான், அவரது தேசப்பற்று.
பெண்கள், ஒழுக்கத்துடனும், கலாசாரத்துடனும் வளர வேண்டும். அவர்கள், ஆண்களுடன் நட்பு பாராட்டி, ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதை தவிர்க்க வேண்டும். ஏழ்மையை விரட்டுவோம் என கூறிய காங்கிரசார், நாட்டில் உள்ள ஏழைகளை விரட்டும் செயலில் ஈடுபட்டனர். நற்பண்புகள் இல்லாத, ஒழுக்கமற்ற தலைவரை பிள்ளையாக பெறுவதை விட, மலடியாக இருப்பதே மேல்.இவ்வாறு அவர் பேசினார்.
'ஆண் நண்பர்கள் இல்லாத பெண்கள், வெறும் அலங்கார கல்லிற்கு சமம்' என, விராட் கோஹ்லி கருத்து தெரிவித்திருந்த நிலையில், பன்னாலால், அவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
15-ஜூன்-201814:11:56 IST Report Abuse
Pasupathi Subbian பத்திரிக்கைகளின் குசும்பு. கருத்தை திரித்து , கேவலப்படுத்த நினைக்கின்றனர். இங்கே அந்த பி ஜெ பி தலைவர் கூறியிருப்பதாக வெளிவந்த செய்தியில் , தவறான விஷயம் ஒன்றுமே இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
15-ஜூன்-201807:35:25 IST Report Abuse
Cheran Perumal இவர் கூறியதில் என்ன இழிவு இருக்கிறது என்று தெரியவில்லையே?ஆண்களுடன் ஊர் சுற்றுவது முடிவில் பெண்களுக்கே ஆபத்தாக முடிகிறது. மேலும் நன்மக்களை பெறவேண்டும் என்று வள்ளுவரே "எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்கா பண்புடை மக்கட் பெறின்" கூறுகிறார். நன்மக்களை பெறாவிடில் துன்பம் ஏழு பிறப்பு அளவுக்கு அதிகமாக இருக்கும் என்று பொருள் கொள்ளவேண்டும். வள்ளுவரே பெண்களை இழிவுபடுத்திவிட்டார் என்று கூட இனி அங்கலாய்ப்பு இருக்கும் போல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X