ஊட்டி அருகே 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி; 28 பேர் காயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி அருகே 300 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் பலி; 28 பேர் காயம்

Updated : ஜூன் 15, 2018 | Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

ஊட்டி:ஊட்டி - குன்னுார் சாலையில், அரசு பஸ், 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஏழு பேர் பலியாகினர்; 28 பேர் காயமடைந்தனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டியிலிருந்து நேற்று காலை, 11:00 மணிக்கு, குன்னுார் நோக்கி அரசு பஸ் புறப்பட்டது.பஸ்சை டிரைவர் ராஜ்குமார், 40, என்பவர் இயக்கினார். கண்டக்டர் பிரகாஷ், 38, உட்பட, 35 பேர் பஸ்சில் சென்றனர்.
போக்குவரத்து பாதிப்பு
ஊட்டியிலிருந்து, 7 கி.மீ., தொலைவில் உள்ள மந்தாடாவில், பஸ் சென்று கொண்டிருந்தபோது, சாலை நடுவே மழை நீரில் நிரம்பியிருந்த குழியில், பஸ் டயர் இறங்கியது; கட்டுப்பாட்டை இழந்த பஸ் நிலை தடுமாறி, 300 அடி பள்ளத்தில் கவிழ்ந்து, உருண்டது.பயணியர் பலர் பஸ்சில்இருந்து துாக்கி வீசப்பட்டனர்.விபத்தில், 28 - 64 வயதுடைய 9 பேர் பலியாகினர். காயமடைந்தவர்களை, '108' ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களில், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பலத்த காயமடைந்த, 18 பேர், கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.மேலும் காயமடைந்த, 11 பேர், ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த சம்பவத்தால், ஊட்டி - குன்னுார் சாலையில், இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்து நடந்தது எப்படி?
ஊட்டி - குன்னுார் சாலை, தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. குறுகலாக உள்ள இச்சாலை சீரமைத்து, பல ஆண்டுகள் ஆனதால், ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது.நேற்று காலை முதல் ஊட்டியிலிருந்து எல்லநள்ளி வரை கனமழை பெய்து கொண்டிருந்தது. சாலையில் இருந்த குழியில் மழை நீர் நிரம்பியிருந்தது.
பஸ் டயர் குழியில் இறங்கியதும், 'ஸ்டியரிங்' சுழன்றதால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில், வலது புறம் மண் திட்டில் ஏறி, 300 அடி பள்ளத்தில் உருண்டது. இதே இடத்தில், கடந்த காலங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டு, உயிர்பலியும் நடந்துள்ளன.
பயனில்லாத ஆம்புலன்ஸ்
விபத்து நடந்த இடம், குன்னுார் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி. ஊட்டி, குன்னுார் அரசு மருத்துவமனை கட்டுப்பாட்டில், '108' ஆம்புலன்ஸ் வாகனங்கள், 10 உள்ளன.சமீப காலமாக ஆம்புலன்ஸ்கள் பழுது காரணமாக, ஊழியர்கள் பணி செய்ய மறுப்பு தெரிவித்து வந்தனர்.நேற்று நடந்த விபத்தில், 108 ஆம்புலன்ஸ் இரண்டு மட்டுமே மீட்பு பணிக்கு எடுத்து வந்தனர்.
அதே சமயத்தில், ஊட்டி, குன்னுாரிலிருந்து, 10க்கும் மேற்பட்ட தனியார் அமைப்புகளின் ஆம்புலன்ஸ்கள் தானாக வந்து, விபத்தில் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்ல உதவியாக இருந்தன.
நிதி உதவி
விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு, முதல்வர், பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அவர்களின் குடும்பத்திற்கு தலா, இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறேன். குன்னுார் சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்வதற்காக, லவ்டேல் சந்திப்பில் பஸ் ஏறினேன். குழியில் இறங்கிய பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. என்ன நடந்தது என்பதே தெரியவில்லை.
வெங்கடேஷ், லவ்டேல், ஊட்டி.
கூடலுாரில் சர்வீஸ் சென்டரில் பணிபுரிந்து வருகிறேன். ஊட்டியிலிருந்து குன்னுாருக்கு பஸ்சில் செல்லும் போது, மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென பஸ் வலதுபக்கம் இழுத்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. அங்கு நடந்த துயரத்தை வார்த்தையால் விவரிக்க முடியாது; பலரும் வெளியில் துாக்கி வீசப்பட்டனர்.
- கிருஷ்ண குமார், கூடலுார்.

உடனடி ஆய்வு அவசியம்
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான அரசு பஸ்கள், பழைய பஸ்களாக உள்ளன. பஸ்களின் பழுதான நிலை குறித்து, சம்பந்தப்பட்ட டிரைவர்கள் பணிமனையில் உள்ள குறிப்பேட்டில் எழுதி வைத்து, அதிகாரிகளுக்கு விபரத்தை தெரிவித்தாலும் முறையாக பராமரித்து கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
நேற்று விபத்தில் சிக்கிய பஸ்சும் பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டதாகவும், முறையாக பராமரிக்காமலேயே காலையில் பணிக்கு வந்த டிரைவரிடம் பஸ்சை இயக்க கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களின் தற்போதைய நிலை, பராமரிப்பு குறித்து, கலெக்டர் ஆய்வு செய்வது அவசியம்.
குழியால் ஏற்பட்ட விபத்து
அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் ராஜ்குமார் கூறுகையில்,'' ஊட்டியில் இருந்து குன்னுார் செல்லும் போது, கன மழை பெய்து கொண்டிருந்தது. மந்தாடா அருகே செல்லும் போது, சாலையில் இருந்து ஒரு குழியில் திடீரென பஸ் டயர் இறங்கியது. அப்போது, பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால், பள்ளத்தில் கவிழ்ந்தது. பஸ்சை கட்டுப்படுத்த முயன்றும் முடிய வில்லை,'' என்றார்.
கொட்டும் மழையில் மீட்பு பணி!
ஊட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்த கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விபத்து குறித்து அறிந்ததும், சம்பவ பகுதிக்கு வந்து மீட்பு பணியை முடுக்கி விட்டார். போலீஸ், தீயணைப்பு துறை, பொதுநல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கொட்டும் மழையில் காயமடைந்தவர்களை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.prakash - Tiruchi,இந்தியா
15-ஜூன்-201811:51:31 IST Report Abuse
S.prakash எல்லா முறைகேடு தெரிந்திருந்தும் ஓட்டுனரின் கவனமின்மையால் பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்து , கைது செய்ய வேண்டும்.பொறுமையாக ஒட்டியிருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
15-ஜூன்-201811:12:48 IST Report Abuse
christ ஓடுகிற பஸ்களை ஒழுங்கா பராமரிக்க துப்பு இல்லை ,இதுல நவீன வசதிகளுடனும் இரண்டாயிரம் புதிய பஸ் வாங்கப்பட்டு உள்ளதாம் .இதுவும் எத்தனை நாளைக்கு ஓடும் என்பது கடவுளுக்கே வெளிச்சம் . சாலைகளை முறையாக பராமரிக்காத ,பேருந்துகளை ஒழுங்காக பராமரிக்காத தங்களின் பணிகளின் கவனக்குறைவாக செயல் பட்ட 7 பேர்களின் உயிர் பழிக்கு காரணமானவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் ?
Rate this:
Share this comment
Cancel
Muthu - Bangalore,இந்தியா
15-ஜூன்-201811:06:34 IST Report Abuse
Muthu பவர் ஸ்டேரிங் இருந்திருந்தால் குழியில் விழுந்த பொது ஒரு பக்கமாக இழுத்து சென்றிருக்காது... இன்னும் எதனை நாளைக்கி தான் பழைய பேருந்துகளை இயக்குவீர்களோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X