கொலை, தற்கொலை, பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை, தற்கொலை, பலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement


தாய், -மகன் பலி
திருவண்ணாமலை மாவட்டம், அருகாவூரைச் சேர்ந்த நாகப்பன் மனைவி திலகம்,45, மகன் தமிழ்ச்செல்வன்,18, ஆகியோர், தண்டரை கிராமத்துக்கு, நேற்று முன்தினம் இரவு, பஜாஜ் பைக்கில் சென்றனர்.பைக்கை, தமிழ்ச்செல்வன் ஓட்டிச் சென்றார். பெரும்பள்ளம் கிராம ஏரிக்கரை வளைவில் சென்ற போது, செய்யாறில் இருந்து, ஆரணி நோக்கி சென்ற, இன்னோவா கார், பைக்கின் பின்பக்கம் மோதியது. இதில், படுகாயமடைந்த திலகம் இறந்தார். தமிழ்ச்செல்வன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நேற்று இறந்தார். செய்யாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் மோதி முதியவர் பலி
திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர், ராமானுஜம், 75. அவர், நேற்று அதிகாலை மெரினாவில் நடை பயிற்சி செய்வதற்காக சென்றார். காமராஜர் சாலை - சுங்குவார் தெரு அருகே, சாலையை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த கார், அவர் மீது மோதியது.இதில் படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அண்ணா சதுக்கம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கஸ்துாரி பாய் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து ஏற்படுத்திய சிந்தனை செல்வன், 29, என்பவரை கைது செய்த போலீசார், அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.
ரயிலில் இருந்து விழுந்தவர் பலி
கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர், நடராஜ், 57; கார் ஓட்டுனர். அவர், நேற்று முன்தினம் இரவு, வேலை முடித்து மின்சார ரயிலில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஊரப்பாக்கத்தில் ரயில் சென்ற போது, நடராஜ் எதிர்பாராதவிதமாக ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். தாம்பரம் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தீ விபத்தில் பெண் பலி
சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்தவர், லட்சுமி, 37. அவர், மே, 30ல், வீட்டில் விளக்கேற்றும் போது, துணியில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் படுகாயமடைந்தார். மீட்கப்பட்ட அவர், குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.
விபத்தில் 2 பேர் பலி
சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே, கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி, நேற்று முன்தினம் இரவு, வேன் ஒன்று சென்றது. அந்த வேன் மோதியதில், அடையாளம் தெரியாத, 35 வயது மதிக்கத்தக்க நபர், சம்பவ இடத்திலேயே பலியானார்.பரங்கிமலை போக்குவரத்து குற்றப் புலனாய்வு போலீசார், வேன் ஓட்டுனரான, முருகையன், 33, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
அதே பகுதியில், அரை மணி நேர இடைவெளியில், இருசக்கர வாகனம் மோதியதில், 58 வயது மதிக்கத்தக்க ஒருவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இருசக்கர வாகன ஓட்டியை, போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த பெண் பலி
சென்னை, வானகரத்தைச் சேர்ந்தவர், உமாவதி, 49. அவர், 8ம் தேதி இரவு, வானகரம் சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது வந்த இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்த உமாவதி, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார், விபத்து ஏற்படுத்திய சுரேஷ்பாபுவை, கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X