உடல் உறுப்பு தானம் அமைச்சர் வருத்தம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

உடல் உறுப்பு தானம் அமைச்சர் வருத்தம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:''உடல் உறுப்பு தானம் செய்பவர் குடும்பத்தினரையும், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களையும், கொச்சைப்படுத்தும் வகையில், யாரும் குற்றச்சாட்டுக்களை கூற வேண்டாம்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - செந்தில்குமார்: உடல் உறுப்பு தானம் தொடர்பாக, பல்வேறு புகார்கள் வெளியாகி வருகிறது. உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சைகள், இரவு நேரங்களில் நடப்பதால், உடல் உறுப்புகளை பெற முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே, இதில், வெளிப்படை தன்மையை, அரசு கடைபிடிக்க வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர்: மிகுந்த வெளிப்படை தன்மையுடன், உடல் உறுப்பு தானங்கள் பெறப்படுகின்றன. தேவைப்பட்டால், இதுகுறித்து, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். நாட்டிலேயே, தமிழகத்தில் தான் இத்திட்டம், மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.விபத்தில் மகன், மகள், மனைவி என பறிக் கொடுத்தவர்கள், இறுக்கமான சூழ்நிலையிலும், உடல் உறுப்பு தானங்களை செய்ய முன்வருகின்றனர்.
மருத்துவர்கள், மருத்துவமனைகள், சிறந்த சேவை நோக்குடன், உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சையை மேற்கொள்கின்றன. எனவே, அவர்களை கொச்சைப்படுத்தும் வகையில், யாரும் குற்றச்சாட்டுக்களை கூற வேண்டாம்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை