மாற்று திறனாளிகளுக்கு சுயம்வரம் பயன்பெற விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று திறனாளிகளுக்கு சுயம்வரம் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'சுயம்வரம் நிகழ்ச்சியில் பங்கேற்ற விருப்பமுள்ள, மாற்று திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்' என, மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர், சிம்மச்சந்திரன் கூறியதாவது:மாற்று திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை, ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளையும் இணைந்து, எட்டு ஆண்டுகளாக, தமிழகம் முழுவதும், மாற்று திறனாளிகளுக்கான சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒன்பதாம் ஆண்டு சுயம்வரம் நிகழ்ச்சி, நவ., 4ல் நடத்தப்பட உள்ளது.
இதில், மாற்று திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், ஏழை பெண்கள், ஜாதி, மதம் பார்க்காதவர் என, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஆனால், சுயம்வரத்தில் பங்கேற்க விரும்பும் ஜோடியில் ஒருவர், மாற்று திறனாளியாக இருப்பது அவசியம்.
தேர்வு செய்யப்படுவோருக்கு, அக்., 7ல், கவுன்சிலிங் நடத்தப்பட்டு, நவ., 4ல், ஒவ்வொரு ஜோடிக்கும், 1.5 லட்சம் ரூபாய் சீர்வரிசையுடன், இலவச திருமணம் செய்து வைக்கப்படும்.சுயம்வரத்தில் பங்கேற்க விரும்புவோர், www.tndfctrust.com மற்றும் www.geethabhavantrust.com ஆகிய இணைய தளங்களில் இருந்து, விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்; விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை