கருவுற்ற பெண்களுக்கு பேரீச்சம் பழம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கருவுற்ற பெண்களுக்கு பேரீச்சம் பழம்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:''கருவுற்ற தாய்மார்களுக்கு, ரத்த சோகை இருப்பதால், பேரீச்சம் பழம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்.சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க., - மாசிலாமணி: முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ், கருவுற்ற தாய்மார்களுக்கு, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அது, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என, 2017 பிப்., 20ல், அரசாணை வெளியிடப்பட்டது. அதை செயல்படுத்த, ஏப்ரல் மாதம், வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அந்தத் தொகையும், ஐந்து தவணையாக பிரித்து வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம், 4,000 ரூபாய் மதிப்பில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளீர்கள். அதில், ஒரு கிலோ ஊட்டச்சத்து மாவு, சிரப், ஒரு கிலோ பேரீச்சம்பழம், 500 கிராம் ஆவின் நெய், துண்டு போன்றவை இடம்பெறும் என, அறிவித்துஉள்ளீர்கள்.
உணவுப் பொருட்களை, எப்படி பாதுகாக்கப் போகிறீர்கள்; ஆறு லட்சம் கிலோ பேரீச்சம் பழம் வாங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், 'டெண்டர்' விடுவீர்களா; இதை பெற, பெண்கள் பிரசவ வலியை விட, அதிக வலியை சந்திக்க வேண்டி வரும். எனவே, அவர்களுக்கு பணமாகவே வழங்குங்கள்.
மத்திய அரசு, 'பிரதம மந்திரி மாத்ரு யோஜனா திட்டம்' என்ற திட்டத்தை அறிவித்து, முதல் பிரசவத்திற்கு, 5,000 ரூபாய் வழங்க முன்வந்துள்ளது. இந்த திட்டத்தை, மாநில அரசு திட்டத்துடன் இணைத்துள்ளீர்கள். இதில், முத்துலட்சுமி ரெட்டி பெயர், பின்தள்ளப்பட்டுள்ளது. இது, தமிழகத்தின் உரிமையை இழப்பது ஆகாதா?
அமைச்சர், விஜயபாஸ்கர்: எந்த சந்தேகமும் வேண்டாம். முத்துலட்சுமி ரெட்டி பெயருக்குரிய முக்கியத்துவம் குறைக்கப்படாது. மக்கள் நலத் துறை, இந்திய அளவில், முதல் மூன்று இடத்தில் உள்ளது. தமிழகத்தில், கர்ப்பிணி பெண்களுக்கு, ரத்த சோகை ஏற்படுவதாக, மத்திய நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆராய, வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு, அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்க பரிந்துரை செய்தது. ஏற்கனவே, 'அம்மா பரிசு பெட்டகம்' வழங்கும் திட்டம், வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது போல், இந்த திட்டமும் செயல்படுத்தப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.senthil kumar - tamilnadu,இந்தியா
15-ஜூன்-201811:16:20 IST Report Abuse
m.senthil kumar பேரீச்சம்பழத்திற்க்காக ரூ, ஐயாயிரம் கோடி ஒதுக்கப்பட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை