அமைச்சர் பதிலுரை: தி.மு.க., புறக்கணிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் பதிலுரை: தி.மு.க., புறக்கணிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:தி.மு.க., - எம்.எல்.ஏ., மாசிலாமணி, சட்டசபையில் கூறிய திருக்குறளால் சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு, அவர் கூறிய பொருள், சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். அத்துடன், அமைச்சர், விஜயபாஸ்கரின் பதிலுரையையும் புறக்கணித்தனர்.
சட்டசபையில், நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை விவாதத்தில், தி.மு.க., சார்பில், மாசிலாமணி பேசினார். அவர் பேச்சை முடிக்கும்போது, 'வெருவந்த செய்தொழுகும் வெங்கோலனாயின், ஒருவந்தம் ஒல்லைக் கெடும்' என்ற குறளை கூறி, அதற்கு விளக்கம் கொடுத்தார்.
அவர் கூறிய விளக்கத்தை, துணை சபாநாயகர் ஜெயராமன், சபைக் குறிப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இதற்கு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சி துணைத் தலைவர், துரைமுருகன், ''சபையில் திருக்குறளை நீக்கிய, அவமானம் வேண்டாம். அவர் திருக்குறள் தான் கூறினார்; அதை நீக்காதீர்கள்,'' என, வலியுறுத்தினார்.
அதற்கு, துணை சாபாநாயகர், ஜெயராமன், ''திருக்குறள் இருக்கும்; அவர் கூறிய விளக்கம் இடம்பெறாது,'' என்றார்.. ''உங்களை விட அதிகம் நேசிக்கிறோம். ஆனால், அவர் கூறிய விளக்கம், உள்நோக்கத்துடன் கூறப்பட்டது. அது, தற்போதைய சூழலுக்கு ஏற்றதல்ல. எனவே, நீக்கப்பட்டுள்ளது,'' என்றார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெளிநடப்பு செய்வதாக, ஸ்டாலின் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சிறிது நேரத்துக்கு பின், சபைக்கு திரும்பி, விவாதத்தில் பங்கேற்றனர்.
ஆனால், சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் பதிலுரையை புறக்கணித்தனர். 'குட்கா' விவகாரத்தில், அவர் மீதுள்ள குற்றச்சாட்டு காரணமாக, பதிலுரையை புறக்கணித்ததாக, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை