தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க கோரிய வழக்கு தள்ளுபடி| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்க கோரிய வழக்கு தள்ளுபடி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:தேர்தல் ரத்து செய்யப்பட்ட தொகுதிகளுக்கு ஆன செலவை, பணப் பட்டுவாடா செய்த வேட்பாளர்களிடம் இருந்து, வசூலிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழக சட்டசபைக்கு, 2016 மே மாதத்தில் நடந்த பொது தேர்தலின்போது, தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட்ட, தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்கள் பணப் பட்டுவாடா செய்ததாக புகார்கள் வந்தன.இதையடுத்து, இரண்டு தொகுதிகளிலும், தேர்தல் ரத்தானது.
இந்த தேர்தலுக்கான செலவுகளை, தி.மு.க., - அ.தி.மு.க., வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் போட்டியிட்ட, பா.ம.க., வேட்பாளர்கள், பாஸ்கரன், குஞ்சிதபாதம் ஆகியோர், மனுக்கள் தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, எம்.சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:தேர்தல் நடவடிக்கைக்கு இடையூறாக இருந்து, அதனால், கணிசமான செலவுகளை, அரசுக்கு ஏற்படுத்தும் வேட்பாளர்களை, விட்டு விடக்கூடாது.
இருந்தாலும், சட்டசபை, நிர்வாகத்துக்கு உள்ள அதிகாரங்களை, நீதிமன்றங்கள் எடுத்துக் கொள்ள முடியாது. போட்டியிடும் வேட்பாளர்களின் தவறான நடவடிக்கைகளால், அரசின் பணம் வீணாகிறது.அந்த செலவை, அவர்களிடம் இருந்து வசூலிக்க, அரசு தான் சட்டம் கொண்டு வர வேண்டும். சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடத்துவதை, தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
எனவே, தகுந்த சட்டம் கொண்டு வர, தேர்தல் ஆணையம் பரிந்துரைக்கலாம். வேட்பாளர்களிடம் இருந்து, தேர்தல் செலவை வசூலிக்க, சட்டத்தில் இடமில்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை