கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:''தமிழக அரசு சார்பில், கோவையில் உள்ள, கொடிசியா அரங்கில், பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி, இரண்டு கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி அறிவித்து உள்ளார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்புகள்:* கைத்தறி நெசவாளர்களுக்கு, ஆண்டு முழுவதும், தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்க, 2019 பொங்கல் முதல், ஜூன் வரை, கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்* இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தில், ஜூலை முதல் டிசம்பர் வரை, உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு வரும், 9,692 பெடல் தறிகள் போக, எஞ்சிய, 1,558 பெடல் தறிகளுக்கு, ஆறு மாத காலம், கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்* இலவச சீருடை திட்டத்தில், 6.975 பெடல் தறிகள், உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. எஞ்சியுள்ள, 4,275 பெடல் தறிகளுக்கு, பிப்., முதல் ஜூன் வரை, இலவச வேட்டி சேலை திட்டத்தில், கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்* ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல், வேலை வாய்ப்பின்றி இருக்கும், 11 ஆயிரத்து, 250 பெடல் தறிகளுக்கும், இலவச வேட்டி சேலை திட்டத்தில், ஒரு மாதத்திற்கு, கூடுதல் உற்பத்தி திட்டம் வழங்கப்படும்.இதற்காக, ஆண்டுக்கு, 15 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்* ஜவுளித் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில், கோவையில் உள்ள கொடிசியா அரங்கில், பன்னாட்டு ஜவுளிக் கண்காட்சி, இரண்டு கோடி ரூபாய் செலவில் அமைக்கப்ப்படும்* தமிழ்நாடு கூட்டுறவு துணி நுால் பதனீடும் தொழிற்சாலையில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், சாயமிடும் அலகு அமைக்கப்படும்* கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில், 20 லட்சம் பட்டு முட்டைகளை, பதன் செய்யும் திறன் கொண்ட, குளிர்பதன அலகு, 1.50 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்* நடப்பாண்டு, பட்டு நுாற்பு அலகுகள் நிறுவ, நிதியுதவி வழங்கப்படும். 400 முனைகள் கொண்ட, மூன்று தானியங்கி பட்டு நுாற்பு அலகை நிறுவிட, 19.96 லட்சம் ரூபாய் வழங்கப்படும். நுாறு முனைகள் கொண்ட, பல்முனை பட்டு நுாற்பு அலகுகள், 25 அமைக்க, மாநில அரசின் பங்காக, 1.06 கோடி ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை