குத்தாட்டத்தை தடுத்த இன்ஸ்., மீது தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குத்தாட்டத்தை தடுத்த இன்ஸ்., மீது தாக்குதல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காடையாம்பட்டி:ஆடல், பாடல் நிகழ்ச்சியைத் தடுத்த இன்ஸ்பெக்டரை தாக்கியதில், அவரது மண்டை உடைந்தது.
சேலம் மாவட்டம், நல்லுாரில், தோப்புக்காடு முனியப்பன் கோவில் திருவிழா, இரு நாட்களுக்கு முன் துவங்கியது. அதில், குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் பங்கேற்பர்.நேற்று முன்தினம் இரவு, பண்டிகையை முன்னிட்டு, இளைஞர்கள் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்தினர். ஆபாசமாக குத்தாட்டம் நடப்பதாக, அப்பகுதி மக்கள், தீவட்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் சம்பத் தலைமையில் போலீசார், நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என, தடுத்து நிறுத்தினர். அதற்கு, எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி இளைஞர்கள், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே, மர்ம நபர்கள், போலீஸ் ஜீப்பின் முன்புற கண்ணாடியை அடித்து நொறுக்கினர். இதனால், விழா கோஷ்டியினர் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலர்தாக்கியதில், சம்பத்தின் மண்டை உடைந்து,ரத்தம் வந்தது.
ஓமலுார், டி.எஸ்.பி., பாஸ்கரன், அவரை மீட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். அசம்பாவிதத்தைத் தடுக்க, அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
15-ஜூன்-201806:58:36 IST Report Abuse
Amirthalingam Sinniah தெய்வ சன்னிதிகள் புனிதமாக பாதுகாக்க பட வேண்டும்.தெய்வகுற்றங்களுக்கு ஆளாகாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X