அரசு பள்ளியில் அத்துமீறி புகுந்து மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் அத்துமீறி புகுந்து மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பண்ருட்டி:பண்ருட்டி அருகே, அரசு பள்ளியில் புகுந்து மாணவர்களை தாக்கி ரகளையில் ஈடுபட்ட, 29 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த ஒறையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் பிளஸ் 2 படிக்கும் ஒரு பிரிவைச் சேர்ந்த மாணவன், தன்னை வேப்பங்காயால் அடித்ததாக, மற்றொரு பிரிவைச் சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவனை தாக்கியுள்ளார்.
இதையடுத்து, மாணவர்கள் இரு கோஷ்டிகளாக தாக்கிக் கொண்டனர். அவர்களை, ஆசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.நேற்று காலை, பிளஸ் 2 மாணவர் தரப்பைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர், பள்ளியில் அத்துமீறி புகுந்து, 9ம் வகுப்பு மாணவருக்கு ஆதரவாக செயல்பட்ட பிளஸ் 2 மாணவர்கள், எட்டு பேரை சரமாரியாகத் தாக்கினர்.
இதனால், பள்ளியில் பதற்றம் நிலவியது. போலீசார், பள்ளியில் குவிக்கப்பட்டனர்.மாணவர்களைத் தாக்கியது குறித்து, புதுப்பேட்டை போலீசில், பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்படி, 29 பேர் மீது வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201807:59:30 IST Report Abuse
Bhaskaran வருங்கால ச.ம.உ.கல் ஆவதற்கும் கட்சியின் ம.செ கல் ஆவதற்கும் தற்போதே thangal adi தயார் படுத்திக்கொள்கிறார்களோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை