புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புளிய மரத்தில் கார் மோதி 4 பேர் பலி

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரவக்குறிச்சி:கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே, வேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து, புளிய மரத்தில் மோதி, நான்கு பேர் இறந்தனர்.
கரூர், தான்தோன்றிமலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ், 62. இவர், தன் உறவினர் வீட்டுக்கு செல்ல, மனைவி ஜெயலட்சுமி, 55, அவரது தங்கைசுப்புலட்சுமி, 53, ஆகியோருடன் தாராபுரம் நோக்கி, மாருதி வேகன் காரில் நேற்று சென்று கொண்டிருந்தார்.
காரை டிரைவர் முனியாண்டி, 60, ஓட்டினார். மதியம், 12:30 மணிக்கு, சின்னதாராபுரம் அருகே வரும்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த புளியமரத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே காரில் இருந்த நான்கு பேரும் உயிரிழந்தனர்.சின்னதாராபுரம் போலீசார், வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை