சோதனை சாவடியில் ரூ.26 ஆயிரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சோதனை சாவடியில் ரூ.26 ஆயிரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சத்தியமங்கலம்:பண்ணாரி போக்குவரத்து சோதனைச்சாவடியில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத, 26 ஆயிரத்து, 300 ரூபாயைக் கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பண்ணாரியில், போக்குவரத்துத் துறை சார்பில் சோதனைச் சாவடி செயல்பட்டு வருகிறது.தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கிடையேயான மிக முக்கிய போக்குவரத்து சாலையில், தினசரி சுற்றுலா, சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் என, பல ஆயிரம் வாகனங்கள், சோதனைச்சாவடியைக் கடந்துச் செல்கின்றன.
இச்சாலையில் வரும் தமிழகம் மற்றும் பிற மாநில வாகனங்களை ஆய்வு செய்த பின்தான், திம்பம் மலை சாலையில் பயணிக்க அனுமதிக்கப்படும்.இந்நிலையில், இந்த சோதனைச்சாவடியில், சட்டவிரோதமாக, வாகன ஓட்டிகளிடம் பணம் வசூலிப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஏராளமான புகார்கள் சென்றன.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார், பண்ணாரி போக்குவரத்து சோதனைச்சாவடியில் நேற்று காலை, 6:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டு, ஆவணங்களை ஆய்வு செய்தனர்.அப்போது, அவர்களிட மிருந்த ரொக்க பணத்தைக் கைப்பற்றி தணிக்கைசெய்தபோது, கணக்கில் காட்டப்படாத, 26 ஆயிரத்து, 330 ரூபாயைக்கைப்பற்றினர்.கணக்கில் வராத பணத்தைப் பற்றி அங்கு பணியில் இருந்த அதிகாரிகளிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார், மூன்று மணிநேரம் விசாரணை நடத்தினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஜூன்-201808:05:14 IST Report Abuse
Bhaskaran கிட்டத்தட்ட முப்பது ஆயிரம் ரூபாய் ஒரு நாளைக்கு என்றால் மாதத்திற்கு கணக்குவைத்தால் கிட்டத்தட்ட ஒன்பது லட்சம் ரூபாய் ஆண்டிற்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் வாழ்க ஜாக்டோ ஜியோ. வாய்மையே வெல்லும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை