சூறாவளியால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சூறாவளியால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்:சூறாவளி காற்றால், பாம்பன் மீனவர்கள் கடலுக்குச் செல்ல, மீன்வளத் துறை தடை விதித்தது,ஏப்., 15 முதல் ஜூன், 14 வரை, தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்ல தடை உள்ளது. தடைக்காலத்தில் மீனவர்கள் படகில் பழுது நீக்கி, வலைகளை வடிவமைத்து மீன்பிடிக்க தயாராக இருந்தனர்.
ஆனால் சில நாட்களாக, 45 முதல், 55 கி.மீ., வரை வேகமாக காற்று வீசுகிறது. நேற்று நள்ளிரவு தடை முடிந்ததால், மீன்பிடிக்க பாம்பன் மீனவர்கள் தயாராகினர்.ஆனால் ஜூன், 15ல், மணிக்கு, 45 கி.மீ., வேகத்திற்கும் மேல், சூறாவளி காற்று வீசும் என, வானிலை மையம் தெரிவித்ததால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று, சூறாவளி ஏதும் இன்றி வெயில் சுட்டெரித்தது. அங்குள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராக உள்ளனர். ஆனால் வானிலை எச்சரிக்கை தொடர்ந்தால், ராமேஸ்வரம் மீனவருக்கும் தடை விதிக்கப்படும் என, மீன்வளத் துறையினர் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை