தூத்துக்குடி சம்பவம் விசாரிக்க கோரி வழக்கு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி சம்பவம் விசாரிக்க கோரி வழக்கு

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:துாத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
தஞ்சாவூர் காளியப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு:துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரிக்கின்றனர். போலீசார் விசாரணை என்ற பெயரில், பலரை கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெறுகின்றனர்.
துப்பாக்கிச் சூடு தொடர்பான வீடியோ பதிவுகளை உயர் நீதிமன்றத்தில், துாத்துக்குடி, எஸ்.பி., தாக்கல் செய்ய வேண்டும். சம்பவம் தொடர்பாக, எஸ்.பி., மற்றும் அவரது கீழ் உள்ள போலீசார் தொடர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். டி.ஐ.ஜி., அந்தஸ்திற்கு குறையாத அதிகாரி தலைமையில், சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்.இவ்வாறு காளியப்பன் மனு செய்தார்.நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு, விசாரணையை ஜூன், 18க்கு ஒத்திவைத்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை