சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் பரீக்கர்| Dinamalar

சிகிச்சை முடிந்து கோவா திரும்பினார் பரீக்கர்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி:கணைய அழற்சி நோய் சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்ற கோவா முதல்வர், மனோகர் பரீக்கர், நேற்று இரவு, கோவா திரும்பினார்.
கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் மனோகர் பரீக்கர், 62; பிப்ரவரியில், கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். மும்பை லீலாவதி மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக, மார்ச்சில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு, மூன்று மாத சிகிச்சை முடிந்து, நேற்று இரவு, மும்பை திரும்பினார். அங்கிருந்து அவர், கோவாவில் உள்ள தன் இல்லத்துக்கு சென்றார். மூன்று மாதத்துக்கு பின், கோவா திரும்பியுள்ள முதல்வர், தன் அமைச்சரவை சகாக்களுடன், இன்று ஆலோசனை நடத்துவார் என, கூறப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை