'கனிஷ்க்' நிறுவனத்தின் ரூ.138 கோடி சொத்து முடக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'கனிஷ்க்' நிறுவனத்தின் ரூ.138 கோடி சொத்து முடக்கம்

Added : ஜூன் 15, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

சென்னை:சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, 'கனிஷ்க் ஜுவல்லர்ஸ்' நகை கடை அதிபர், பூபேஷ்குமார் ஜெயினுக்கு சொந்தமான, 138 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
நகைக்கடை
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர், பூபேஷ்குமார் ஜெயின். இவரது மனைவி, நீடா ஜெயின். கூட்டாளிகள், தேஜ்ராஜ் அச்சா, அஜய்குமார் ஜெயின், சுமித் கெடியாவுடன் சேர்ந்து, சென்னை உட்பட, பல நகரங்களில், 'கனிஷ்க் ஜுவல்லர்ஸ்' என்ற பெயரில், நகை கடை நடத்தி வந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், புக்கதுறை மற்றும் நடராஜபுரம் கிராமத்தில், தங்கம் மற்றும் வைர நகை தயாரிக்கும் தொழிற்சாலையும் நடத்தி வந்தனர்.இவர்கள், தங்கம் மற்றும் வைர நகை இருப்பு மற்றும் ஆண்டு லாபத்தை அதிகமாக காட்டி, பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 14 வங்கிகளில், 824.15 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்து உள்ளனர். இதுகுறித்து, சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், பூபேஷ்குமார் ஜெயின் மற்றும் அவரது மனைவி, நீடா ஜெயின் உள்ளிட்டோர், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்தனர்.விசாரணைக்கு பின், மே, 25ல், பூபேஷ்குமார் ஜெயினை கைது செய்து, புழல் சிறையில் அடைத்து உள்ளனர். அவர், நிரந்தர வைப்புத்தொகையாக, வங்கியில், டிபாசிட் செய்திருந்த, 143.58 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.
அதேபோல், 'கனிஷ்க் ஜுவல்லர்ஸ்' நிறுவனத்திற்கு, புக்கத்துறை, நடராஜபுரம் கிராமத்தில் உள்ள, தொழிற்சாலையில் இருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கம் மற்றும் அசையா சொத்துக்களையும் முடக்கினர்.135 சென்ட் நிலம்காஞ்சிபுரம் மாவட்டம், புதுப்பாக்கத்தில், பூபேஷ்குமார் ஜெயினுக்கு சொந்த மாக உள்ள, 135 சென்ட் நிலம், நுங்கம்பாக்கத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடு.கத்தீட்ரல் சாலையில் உள்ள கடை, மஹாராஷ்டிராவில் உள்ள வீடு என, பல பகுதிகளில் உள்ள, 138 கோடி ரூபாய் மதிப்புஉள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று முடக்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X