"BJP Has Captured Delhi Secretariat", Says Arvind Kejriwal, Draws Support | தலைமை செயலகம் ஆக்கிரமிப்பு: பா.ஜ. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

தலைமை செயலகம் ஆக்கிரமிப்பு: பா.ஜ. மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி, கவர்னர் அனில் பைஜால், மணீஷ் சிசோடியா, டில்லி தலைமை செயலகம், கெஜ்ரிவால்,கெஜ்ரிவால் குற்றச்சாட்டு, பாஜக, 
 BJP, Delhi Chief Minister Kejriwal, AAP, Governor Anil Bhaijal, Manish Sisodia, Delhi Secretariat, Kejriwal,

புதுடில்லி: பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நான்காவது நாளாக துணை நிலை கவர்னர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகிறார்.
டில்லி ஆம் ஆத்மி முதல்வர் கெஜ்ரிவால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்திட ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் ஒத்தழைப்பு தராமல் அமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து வருவதாக கூறி துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உடன் நேரில் சந்தித்து புகார் தெரிவிக்க கடந்த திங்களன்று வந்தார். துணை நிலை கவர்னர் சந்திக்க நேரம் தராமல்இருந்தார்.
இதையடுத்து துணை நிலை கவர்னர் அலுவலகத்திற்கு புகுந்து அங்குள்ள வரவேற்பாளர் அறையில் கடந்த 4 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்.இந்நிலையில் கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியது, டில்லி தலைமை செயலகத்தினை பா.ஜ. ஆக்கிரமித்து வைத்துள்ளது. எந்த நிர்வாக பணிகளும் செய்ய முடியவில்லை. தலைமை செயலகத்தினை பா.ஜ.வினர் ஆக்கிரமிக்க அனுமதி கொடுத்தது யார்? போலீசார் எங்கே போயினர் என்றார்.
இதற்கிடையே கெஜ்ரிவால் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் தலையிட வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.முன்னதாக தலைமை செயலக கட்டடத்தின் மேற்கூரையில், ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் மெகா பேனரை வைத்துள்ளனர். அதில் போராட்டம் நடக்கவில்லை. டில்லிவாசிகள் தங்களது வழக்கமான பணியை செய்கிறார்கள். முதல்வர் கெஜ்ரிவால் விடுமுறையில் உள்ளார் என அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201808:45:03 IST Report Abuse
Srinivasan Kannaiya நேர்மை என்றால் அரசியவாதிகளுக்கு மட்டும் இல்லை ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளுக்கும் பிடிப்பதில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X