After Shatrughan Sinha ditches BJP ally JD(U)'s iftar party, Tejashwi Yadav says he 'will be welcomed' in RJD | பா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி| Dinamalar

பா.ஜ.வுக்கு குட்பை சொல்ல சத்ருகன் ரெடி

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (67)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சத்ருகன் சின்கா, பாஜக, தேஜாஸ்வி யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் , கீர்த்தி ஆசாத்,Shatrughan Sinha, BJP, Tejasvi Yadav, Rashtriya Janata Dal, Keerthi Azad,

பாட்னா: சத்ருகன் சின்கா பா.ஜ.வில் இருந்து விலகி ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இணைந்தால் வரவேற்போம் என தேஜாஸ்வி யாதவ் கூறினார்.
பீஹாரில் பிரதான எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளது.இக்கட்சி சார்பில் நேற்று நடந்த இப்தார் விருந்தில், பா..ஜ. எம்.பி. சத்ருகன்சின்கா கலந்து கொண்டார்.இவர் தனது சொந்த கட்சியையும் அதன் மேலிடத்தையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்..
இந்நிலையில் விரைவில் காங், அல்லது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியில் இணையலாம் என செய்திகள் வெளியாயின.இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும் லாலுவின் மகனுமான தேஜாஸ்வி யாதவ், கூறியது, சத்ருகன்சின்கா ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் இணைந்தால் அவரை வரவேற்போம்.கட்சியில் சேருவது அவரது தனிப்பட்ட முடிவு. கட்சியில் இணைந்தால் வரப்போகும் 2019-ம் லோக்சபா தேர்தலில் பாட்னாஷாகிப் லோக்சபா தொகுதியில் போட்டியிட சீட் தருவோம். என்றார்.

இதே போன்று மற்றொரு பா.ஜ. எம்.பி.யான கீர்த்தி ஆசாத், பா.ஜ.வில் இருந்து விலகி காங், கட்சியில் ஐக்கியமாக தயாராகி வருவதாகவும், கட்சியில் இணைந்தால் அவருக்கு மீண்டும் அதே தர்பங்கா லோக்சபா தொகுதி ஒதுக்க காங். சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ANANDAKANNAN K - TIRUPPUR,இந்தியா
15-ஜூன்-201817:33:51 IST Report Abuse
ANANDAKANNAN K இவர் பாஜக போட்ட பிட்சையிலே பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் அதை ராஜினாமா செய்து விட்டு எங்கு வேண்டுமானாலும் போகட்டும்.இவரின் MP பதவி நாய் பெற்ற தேங்காப்பழம் போன்று உள்ளது. லாலு என்றால் ஊழல் தான் என்று பீகார் மக்கள் மனதில் படிந்துவிட்டது.பதவி ஆசை மட்டுமே இவரிடம் உள்ளது.போகட்டும் லாலு மகனிடம், சீண்டுவார் இல்லாமல் அழியட்டும்.
Rate this:
Share this comment
Cancel
L SIVAKUMAR - chennai,இந்தியா
15-ஜூன்-201816:45:05 IST Report Abuse
L SIVAKUMAR துரோகிகள் ஓடட்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
15-ஜூன்-201816:20:17 IST Report Abuse
இந்தியன் kumar பாஜகவில் நின்றதால் தான் சத்ருகன் சின்கா ஜெயித்தார் .மோடிக்காக விழுந்த வோட்டு தானே தவிர தனியாக நின்று சத்ருகன் ஜெயிக்க முடியுமா ???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X