சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டு அமைக்க அரசு மானியம்: முதல்வர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டு அமைக்க அரசு மானியம்: முதல்வர்

Added : ஜூன் 15, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டு அமைக்க அரசு மானியம்: முதல்வர்

சென்னை:''நடப்பாண்டு, 50 கோடி ரூபாய் செலவில், 90 சதவீத மானியத்தில், 1,000 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் நிறுவப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு:
* இலவச மின் இணைப்பு பெற்றவர்களும், மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தோரும், மின் இணைப்பை துறப்பதற்கு முன்வந்தால், 90 சதவீத மானியத்தில், சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள், அரசு சார்பில் அமைத்து தரப்படுகிறது.
நடப்பாண்டு, குறுவை சாகுபடி தொகுப்பு திட்டத்துடன், 500 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மேலும், டெல்டா மாவட்டங்கள் அல்லாத பிற பகுதிகளுக்கும், 500 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள் என, 1,000 சூரியசக்தி மோட்டார் பம்பு செட்டுகள், 50 கோடி ரூபாய் செலவில், 90 சதவீத மானியத்தில் நிறுவப்படும்
* சிறுதானியப் பயிர்களின் உற்பத்தியை உயர்த்த, விதை உற்பத்தி மற்றும் வினியோகம்; தொகுப்பு செயல் விளக்கம்; ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து வினியோகம்; சிறு தளைகள் வினியோகம் போன்ற பணிகளுக்காக, நடப்பாண்டில், 6.62 கோடி ரூபாய், நிதி வழங்கப்படும்
* சிக்கன நீர் மேலாண்மைக்காக, நடப்பாண்டு வாழை சாகுபடிக்கு, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், நுண்ணீர் பாசன முறையை அமைக்க, விவசாயிகளுக்கு, மானியமாக, 27.83 கோடி ரூபாய் வழங்கப்படும்
*கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் உள்ள, தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்; திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் இயங்கி வரும், காய்கறி மகத்துவ மையம் ஆகியவற்றில், தோட்டக்கலை அறிவியல் சார்ந்த, ஈராண்டு பட்டயப் படிப்பு, நடப்பு கல்வியாண்டில் துவக்கப்படும். ஒவ்வொரு மையத்திலும், 50 மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
இம்மையங்களில், கூடுதல் வசதிகளை ஏற்படுத்த, இரண்டு கோடி ரூபாய், நிதி வழங்கப்படும். திருவள்ளூர் மாவட்டம், மாதவரத்தில் இயங்கி வரும், ஈராண்டு தோட்டக்கலை பட்டயப் படிப்பு மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைப்பு அங்கீகாரம் பெற்று, தோட்டக்கலைத் துறை சார்பில் நடத்தப்படும்
* நடப்பாண்டு, ஒன்பது வட்டாரங்களில், 18 கோடி ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்படும்
* நீலகிரி மாவட்டத்தில், 80 ஏக்கர் பரப்பளவில், 'இரு நுாற்றாண்டு பசுமைப் புல்வெளி' என்ற புதிய பூங்கா, 10 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். நீலகிரி நகரத்தில், 500 வாகனங்களை நிறுத்தும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில், வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.இவ்வாறு முதல்வர் அறிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
15-ஜூன்-201815:05:59 IST Report Abuse
N.Kaliraj இதில் சிறிய ஏழை விவசாயி பயனடையப்போவதில்லை...இந்த போட்டியில் கலந்துக்க வாய்ப்பும் அவர்களுக்கு இல்லை...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஜூன்-201809:29:52 IST Report Abuse
Srinivasan Kannaiya அப்போ முதலில் உங்கள் உற்றார் உறவினர்... இரண்டாவதாக கட்சிக்காரர்கள்.. மற்றும் அவரது உறவினர்கள்... மூன்றாவது நட்பு கட்சி எதிர் கட்சி மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கும், மீதி ஏதாவது மிச்சம் மீதி இருந்தால் உண்மையான விவசாய்க்களுக்கு கொடுக்கலாம்..
Rate this:
Share this comment
Cancel
venkat Iyer - nagai,இந்தியா
15-ஜூன்-201807:28:02 IST Report Abuse
venkat Iyer Sir,TANGEDCO disconnected power connection whoever not doing rice crop in the Agri free pumpset connection.I was done integrating the farming tem in farmer earn to the daily,weekly,monthly,three month,six month,one year and five year etc.Due to essential food paddy only eb giving பவர் Now,please consider disconnected farmers to get solar will helpful
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை